2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பழுதடைந்த உணவை பரிமாறியவருக்கு பிணை

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவைப் பரிமாறிய குற்றசாட்டில், நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மண்டபத்தின் முகாமையாளர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

உரும்பிராய் பகுதியில், திருமணத்துக்கான மண்டப ஏற்பாடுகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் ஆகியவற்றை, மணமக்கள் வீட்டார் மண்டப உரிமையாளர்களிடமே ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், திருமணம் முடிந்தப் பின்னர் உணவுப் பரிமாறப்பட்ட போது வழங்கப்பட்ட மாமிசக் கறிகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன.

அதனை அறியாது, அதனை உட்கொண்டவர்கள், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளனர். அதனை அடுத்து திருமண வீட்டில் நின்றவர்கள் உணவைப் பரிசோதித்து பார்த்தபோது, கறிகள் பழுதடைந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, இது தொடர்பில் உடனடியாக கோப்பாய் பொலிஸார் மற்றும் அப்பகுதிச் சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர், பழுதடைந்த உணவுப் பொருட்களைக் கைப்பற்றி, விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், மண்டபத்தில் வழங்கப்பட்ட ஐஸ்கிறீம் கோப்பையில், உற்பத்தி திகதி மற்றும் முடிவு திகதி என்பன பொறிக்கப்படாததும் கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் நேற்று (10) மாலை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் மண்டப முகாமையாளரான பெண்ணுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

அத்துடன், வழக்கை பிறிதொரு திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .