2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சுமூகமான சூழ்நிலையில் கிடைக்கும் சுதந்திரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

இன்று ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் கிடைக்கும் சுதந்திரத்தை மக்கள், உரியவகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இன்று பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் அனைத்தும் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

வன்னியில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள 100 விவசாயிகளுக்கு சர்வோதயத்தின் ஏற்பாட்டில் நீரிறைக்கும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ். செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்:

மக்கள் இன்று சுதந்திரமாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் சந்தர்ப்பத்தை மக்கள் உரியவகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.- என்றார்.

இந்நிகழ்வில் யாழ். மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், சர்வோதயத்தின் தேசிய அமைப்பாளர் யாக்கர் அரியரட்ணம், சர்வோதயத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளர் திருமதி ரேணுகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .