2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழில் சட்டம் ஒங்கை பாதுகாப்பதற்கு பொலிஸ் இராணுவம் இணைந்து நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 23 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்க்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடவடிக்கையெடுக்கவுள்ளார்கள்.

கடந்த இரண்டு மாத காலத்தில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் மற்றும் கொள்ளைகள் அதிகரித்துள்ள நிலையில்  இது சம்பந்தமான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட மற்றும் பேராயர் அருட்திரு தோமஸ் சௌந்தர நாயகம் உட்பட அரச அதிகாரிகள், மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

இந்தக் கலந்துரையாடலின் போது இராணுவத்தினர் இரவு பகல் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

பொது மக்கள் இத்தகைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுமாக இருந்தால் அயலில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அன்றி இராணுவ முகாமிலோ தெரிவித்து உடன் நடவடிக்கையெடுக்கலாம்.

இதற்;கான நடவடிக்கைகள் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இராணுவ முகாம்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் தமது முழுமையான பங்களிப்பை வழங்க முன் வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .