2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழில் சட்டவிரோத வடி சாராயங்களின் உற்பத்தி அதிகரிப்பு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத வடி சாராயங்களின் உற்பத்தி அதிகரித்திருப்பதாக யாழ். பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் கிகேரா தெரிவித்தார்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு யாழ். பொலிஸாரினால் விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாகம் அவர் குறிப்பிட்டார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை  சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத வடி சாராய உற்பத்தியும் விற்பனையும் கிராம புறங்களில் அதிகதித்துள்ளது. உற்பத்தியாளர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் தண்ட பணத்தை செலுத்தி விட்டு மீண்டும் சட்டவிரோத வடி சாராயங்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

குடும்ப பொருளாதாரத்திற்கு சட்டவிரோதமாக முறையில் வடி சாராயங்களை உற்பத்தி செய்ய அனுமதிக்க முடியாது. இவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை மேற்கொள்வதற்குரிய ஆலோசனைகளை வழங்குவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .