2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யுத்தத்தில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதால் சர்வதேசத்திற்கு பொறுப்புக்கூறும் தேவை ஏற்பட்டுள்ளது: நீத

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

'யுத்தத்தில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதினால் சர்வதேச சட்டங்களை அவதானிக்கும் சர்வதேசத்திற்கு நாங்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம்' என நீதியமைச்சர் ரவூப் ககீம் தெரிவித்தார்.

இலங்கையின் இரண்டாவது சிறுவர் நீதிமன்றம் இன்று யாழ். குருநகரில் திறந்து வைக்கப்பட்ட போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், 'சிறுவர்களுக்கான சட்ட நீதியில் மற்றைய நாடுகளை விட முன்னிலையில் நிற்கின்றது. சிறுவர்கள் குறித்து நாங்கள் அடைய வேண்டிய இலக்குகள் அதிகமாக உள்ளன. எமது நாடு சிறுவர்கள் குறித்து மிக அவதானத்துடன் செயற்படுகிறது.

சிறுவர் நீதிமன்றங்களை நாட்டில் அமைப்பதன் மூலம் சிறுபராயக் குற்றவாளிகளை சீர்திருத்தி அவர்களை ஆற்றுப்படுத்தி சமூதாயத்தில் நல்ல பிரஜைகளாக்க முடியும்.

பிராந்தியத்திலுள்ள மற்றைய நாடுகளை விட சிறுவர் உரிமைகளில் நாங்கள் முந்திக்கொண்டு இருக்கின்றோம். சிறுவர்களின் எதிர்கால வாழ்வியலை சீர்திருத்தி ஒழுங்கமைப்பதில் நாங்கள் முன்னிலையில் நிற்கின்றோம்.

சிறுவர்கள் குறித்து அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றன. சிறுபராயக் குற்றவாளிகளை நீதித்துறையின்பால் அரவணைத்து நன்நடத்தையில் ஆற்றுப்படுத்துவதுதான் சிறுவர் நீதிமன்றங்கள் செய்ய வேண்டிய கடமையாகும்' என்றார்.

தொடர்புடைய செய்திகள்:

நிரந்தர சமாதானம் கிடைத்துள்ள இச்சூழலில் நீதித்துறையை வலுப்படுத்த வேண்டும்: பிரதம நீதியரசர் ஷிராணி

யாழ்ப்பாணத்தில் சிறுவர் நீதிமன்றம் திறப்பு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .