2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாகாண சபைகள் மத்திய அரசாங்கத்தில் தங்கிருக்கக்கூடாது: அஜித் நிவாட் கப்ரால்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)


மத்திய அரசாங்கத்தின் மீது தங்கிருக்காது மாகாண சபைகள் தமது முயற்சியில் வருமானத்தை ஈட்டி அபிவிருத்தியை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 15ஆவது ஆளுநர் மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'மாகாண சபைகள் ஊடாக பிராந்திய அபிவிருத்தி சந்தர்ப்பங்களும் சவால்களும்' என்ற தொனிப்பொருளில் சிறப்புரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'போருக்குப் பின்னரான மூன்று ஆண்டு காலப்பகுதியில் வடபகுதி 27 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சியின் ஆதாரங்களாக இங்குள்ள வீதிகள், வைத்தியசாலைக் கட்டடங்கள், மக்களின் வாழக்கைத் தரங்கள் என்பற்றைக் கூறலாம்.

மாகாண சபைகளுக்கு அவைகளின் அபிவிருத்திக்கேற்ப இனிவரும் காலங்களில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நிதி ஆணைக்குழு அண்மையில் ஒரு தீர்மானத்தினை கொண்டுவந்தது.

மாகாண சபைகளின் அபிவிருத்திக்கு மத்திய அரசாங்கத்திடமே நிதி கோரப்பட்டு வருவதாக மாகாண சபைகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டு வந்த நிலையிலேயே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடுவதற்கு ஒவ்வொறு மாகாணங்களும் தங்கள் சுயமுயற்சியில் வருமானத்தையீட்டி அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் வெளிநாடுகளில் சிறிய நீர்வீழ்சியுள்ள இடங்களை சுற்றுலாத் தளமாக மாற்றி அதனூடாக பல மில்லியன் டொலர்களை வருமானமாக பெறுகின்றார்கள். எம்மிடம் பெரும் நீர்வீழ்ச்சிகள் பல இருந்தபோதும் இதனை சுற்றுலா தளமாக மாற்றி வருமானத்தை ஈட்ட நாங்கள் முன்வரவில்லை.

இவ்வாறு சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடங்களை இனங்கண்டு அவற்றின் மூலம் நாங்கள் வருமானங்களை ஈட்டிக்கொள்ள வேண்டும்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .