2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குடிபோதையில் நிம்மதியை குலைத்த தந்தையை பிடித்துகொடுத்த பிள்ளைகள்

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

தினமும் மது அருந்திவிட்டு வந்து தங்களுடைய குடும்பத்தின் நிம்மதியை சீர்குலைத்த தந்தையை அவரது பிள்ளைகள் இருவர் பொலிஸில் பிடித்துகொடுத்த சம்பவமொன்று சுன்னாகம் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நபரொருவர் தினமும் மது அருந்தி விட்டு வந்து தனது மனைவியுடன் சண்டையிட்டுள்ளதுடன்; குடும்பத்தின் நிம்மதியையும் சீர்குலைத்துள்ளார்.

மேற்படி நபரின் இத்தகைய செயற்பாட்டினால் அவரது, சுமார், 10,12 வயது மதிக்கத்தக்க ஆண், பிள்ளைகள் இருவரும் மனைவியும் அச்சத்திற்குள்ளாகிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த நத்தார் தினத்தன்று தனது வழமையான செயற்பாட்டில் ஈடுபட்ட இந்நபர் தொடர்பில் மேற்படி பிள்ளைகள்  சுன்னாகம் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இந்நபர் வீட்டிற்கு வெளியில் கத்தியை பிடித்தவாறு கத்திகொண்டிருந்தபோது குறித்த பிள்ளைகளுடன்  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்நபரை கைது செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • selvadurai Thursday, 27 December 2012 07:58 AM

    20. மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.

    21. குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும். ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?

    30. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.

    31. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

    32. முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.

    33. உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய். நீதிமொழிகள் 23 ;29-35 பைபிள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .