2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இராணுவத்தினர் முகாம்களுக்குள் இருக்கவேண்டும்: சி.வி. விக்கினேஸ்வரன்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

தேர்தல் காலத்தில் இராணுவத்தினர் முகாம்களுக்குள் இருப்பது சிறந்தது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்களை ஆட்சேபனை தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றது.  இது தொடர்பில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வவாறான செயற்பாடுகள் நடைபெற்றால் அது எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக அமையும். இந்த தேர்தல் காலத்தில் இராணுவத்தினர் முகாம்களுக்குள் இருப்பது சிறந்தது' என்றார்.

இதேவேளை, இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் சி. தங்கராசா தெரிவிக்கையில்,

'இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இராணுவத்தினர் முகாம்களுக்கு முடங்கவேண்டும் என்று சொல்லும் அதிகாரம் எனக்கு இல்லை என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இருந்தும் தேர்தல் விடயத்தில் இராணுவத்தின் தலையிடாமல் இருப்பது சிறந்தது என்று கருதுகின்றேன.

இராணுவம் இங்கு பாதுகாப்புக்கு மட்டுமே பொறுப்பு. இராணுவத்தினர் முகாம்களுக்கு முடங்கவேண்டும் என்று எங்கள் கட்சி சொல்லவில்லை.

இருந்தும் தேர்தல் விடயத்தில் இராணுவம் தலையிடுவதை அனைத்துக் கட்சிகளைப் போன்று எமது கட்சியும் நிராகரிக்கிறது' என்றார்.

'இராணுவத்தினர் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள். அவர்களை ஒதுங்க சொல்ல முடியாது, ஆனால், தேர்தல் விடயங்களில் தலையிடுவதை அனுமதிக்க முடியாதென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராஜா தெரிவித்தார்.

'தேர்தல் விடயங்களில் இராணுவ தலையீடுகள் தேர்தல் சட்டத்திற்க முரணானது. இராணுவத்தினர் பாதுகாப்பிற்கானவர்கள். அவர்களை முகாமிற்குள் இருக்க வேண்டுமென்று கூறுவது பிழையானது.

பாதுகாப்பு விடயத்தில் நாங்கள் தலையிட கூடாது., அதேநேரத்தில் தேர்தல் விடயத்தில் இராணுவத்தினர் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .