2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கித்துள் வாரம் பிரகடனம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 31 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

பனை அபிவிருத்தி சபையினால் நாளை செவ்வாய்க்கிழமை (01) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரையான காலப்பகுதி 'கித்துள் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

இந்தக் காலப்பகுதியில் கடந்த கால யுத்தத்தினால் அழிந்து போயுள்ள எமது செல்வமான பனைமரங்களின் விதைகளை நாட்டுதல், பனம் பொருட்கள், கித்துள் பொருட்களை சந்தைப்படுத்தல் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பொதுமக்களிடம் இவற்றைப்பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர்  கூறினார்.

இதேவேளை, திவிநெகும வாழ்வெழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பிரதேசத்தில் பனை அபிவிருத்திச் சபையின் பயிற்சிகளைப் பெற்ற 98 பயனாளிகளுக்கு தலா 10,000 ரூபா பெறுமதியான பனைசார் பொருட்களின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் நாளை (01) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பனை அபிவிருத்தி சபையும் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து வழங்கும் இந்த உபரகணங்கள் வழங்கும் இந்நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அதேவேளை மேற்படி பயிற்சிகள் பெற்ற யாழ்ப்பாணத்தின் வரணி, இணுவில் மற்றும் உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கான உபகரணங்களும் யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து நாளை (01) மாலை கையளிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பனம்பொருள், கைப்பணி உற்பத்தியாளர்கள் 432 பேருக்கு ரூபா 4,320,000 பெறுமதியான உபகரணங்கள் கையளிக்கும் நடவடிக்கையிலே மேற்படி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .