2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இனங்களின் இணைவினூடாக அபிவிருத்தியை அடையமுடியும்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தமிழர், சிங்களவரென்ற பேதமின்றி அபிவிருத்திக்காக உழைக்க வேண்டும். இனங்களின் இணைவினூடாகவே  அபிவிருத்தியை  அடையமுடியுமென பாரம்பரிய சுதேசிய வைத்திய பிரதி அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் பல அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. அபிவிருத்தியின் நன்மைகளை தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றாரகளெனவும் அவர் கூறினார்.

யாழ். தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு  கோடைகால விழா சனிக்கிழமை (19) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர்  மேலும் உரையாற்றுகையில்,

'யுத்தம் நிறைவடைந்த பின்னர் இங்கு வந்தபோது போதிய அபிவிருத்திகள் இருக்கவில்லை. போக்குவரத்து மேற்கொள்வதில் கூட மிகவும் சிரமம் காணப்பட்டது. ஆனால், தற்போது கொழும்பிலிருந்து கூட 6 மணித்தியாலங்களுக்குள் இங்கு வந்துவிடக்கூடிய வகையில் வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன. போக்குவரத்து எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது யுத்தம் நிறைவடைந்ததால் ஏற்;பட்ட நன்மையாகும்.

நான் தங்கியிருந்த இடத்திலிருந்து இங்குவரை பாரம்பரிய மரபுக்கமைய  வரவேற்பளித்து அழைத்து வந்தமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது இனங்களுக்கிடையிலான நட்புறவு வெளிப்பாட்டின் உறவுகளை நேசிப்பதாக இருந்தது.  இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தினூடாகவே எமது நாட்டிடை கட்டியெழுப்பமுடியும்.

தமிழர்களாகிய நீங்கள் இன்று மகிழ்ச்சியாக  வாழ்வதற்கு ஜனாதிபதியின் முயற்சியால் உங்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளார். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகி;றார். இப்புத்தாண்டு விழாவை நடத்துவதற்கு ஒழுங்கமைத்த தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் எனது நண்பர் யோகராஜனுக்கு எனது நன்றி. எனது தந்தையார் யாழ்ப்பாணத்துக்கு வந்து சேவையாற்றினார். யாழ். மக்கள் மீது கொண்ட அன்பின் வெளிப்பாட்டுடன் விரும்பி பணியாற்றியுள்ளார். தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் ந.யோகராஜன் சித்த ஆயுர்வேத மருத்துவத்துறையை  வளர்ப்பதற்காக தன்னை அர்ப்பணித்து அரும்பாடுபடுகின்றார். சித்த ஆயுர்வேதத்துடன் இணைந்து உங்களுக்கு அவர் சேவை செய்கிறார்.

தற்போதைய  இம்மகிழ்ச்சிகரமான சமாதானச் சூழலில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இனிவரும் காலத்தில் நாம் இணைந்து சேவையாற்றுவோம். அனைவரும் இணைந்து பணியாற்றுவதனுடாக எமது நாட்டை அபிவிருத்தி அடையச்செய்வதுடன், சுபீட்சமான வாழ்வையும் நாம் அமைத்துக்கொள்ள முடியும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .