2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தொண்டைமானாறு மணல் திட்டு அகற்றப்பட்டது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ். தொண்டைமானாற்றுக் கடல் நீரேரியில் ஒட்சிசன் பற்றாக்குறையால் பெருமளவான மீன்கள் இறந்து கரையொதுங்கியதை அடுத்து, கடல்நீரையும் கடல் நீரேரியையும் இணைத்திருந்த மணல் திட்டு ஞாயிற்றுக்கிழமை (20) அகற்றப்பட்டது.

தொண்டைமானாற்றுக் கடல் நீரேரியில் செல்வச்சந்நிதி கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வெள்ளிக்கிழமை (18) பெருமளவான மீன்கள் இறந்து கரையொதுங்கின. குறிப்பாக திரளி வகையன  மீன்கள் இறந்து கரையொதுங்கின.

இந்நிலையில், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்  தலைமையில் வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நா.சுபாகரன், நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.கருணாநிதி,  தொண்டைமானாறு கடல் நீரேரி கடற்றொழிலாளர் சங்கச் செயலாளர் என்.வர்ணகுலசிங்கம் ஆகியோர் குறித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்போது, மீன்கள் இறந்து கரையொதுங்கியமைக்கு  ஒட்சிசன் பற்றாக்குறையே காரணமென்று தெரியவந்தது. இதனால்,  கடல்நீரேரியின் முகத்துவாரத்திலிருக்கும் மணல் திட்டை அகற்றி  ஒட்சிசன் குறைந்த இந்த நீரை  கடல் நீருடன் இணைப்பதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் நிதியுதவியில் மேற்படி மணல் திட்டு அகற்றப்பட்டுள்ளது.
இம்மணல் திட்டு அகற்றப்படுவதால்  தொண்டைமானாற்றுக் நன்னீர் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதெனவும் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .