2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுகாதாரமற்ற உணவக உரிமையாளர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கோப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் உணவகங்களை நடத்தி வந்த 7 உணவக உரிமையாளர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி வியாழக்கிழமை (13) தீர்ப்பளித்தார்.
 
கோப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சிறுப்பிட்டி பகுதியிள்ள உணவகங்கள் கடந்த வாரம் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தமை, மேலங்கி அணியாமல் ஊழியர்கள் பணியாற்றியமை, உடற் சுகாதாரம் பேணமை, மற்றும் மருத்துவ அறிக்கை இன்றி ஊழியர்கள் பணிபுரிந்தமை போன்ற குற்றச்சாட்டுகளில் 7 உணவகங்கள் அடையாளங் காணப்பட்டு, அந்த உணவகங்களில் உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தகர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .