2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பஸ்கள் சேவையில் ஈடுபடாமையால் சிரமத்தில் பயணிகள்

க. அகரன்   / 2018 ஜூன் 13 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று (13) காலை இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடாமையால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

தூர இடங்களுக்குச் செல்லும் அலுவலர்கள், மாணவர்கள் இதன்போது பாதிப்பை எதிர்கொண்டிருந்தனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த நிலையில் அவரது மரணச்சடங்கில் ஊழியர்கள் பங்கேற்பதுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றமையாலேயே இந்நிலை ஏற்பட்டதாக போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை பருவகால சீட்டை பெற்றுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் இது தொடர்பாக பெரும் விசனம் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நேரத்தில் தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுவதற்கான நேர அட்டவணை இல்லாமையால் போக்குவரத்துச்சபை பஸ்களிலேயே செல்ல வேண்டிய நிலை வவுனியாவில் காணப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு பயணிகள் தெரிவித்ததையடுத்து, ஊடகவியலாளாகள் அங்கு சென்றடைந்ததும், 7.41 மணியளவில் அலுவலகம் திறக்கப்பட்டு பஸ்கள் சேவையில் ஈடுபட ஆரம்பித்தமையை அவதானிக்க முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .