2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உயர்தர திறமைசாலிகளுக்கு இலங்கை வங்கியின் ‘நெனஜய’ புலமைப்பரிசில்கள்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் முதன்மை இளைஞர் சேமிப்புக் கணக்காகிய 1810 Smart Gen சேமிப்புக் கணக்குகளுடைய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறந்த முறையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 13ஆவது வருடத்திலும் இலங்கை வங்கி விருதுகளை வழங்கவுள்ளது.  

தங்களது உயர்கல்விக் கனவை நனவாக்குவதற்கு இலங்கையில் வாழும் இளம் சந்ததியினரை வலுவூட்டு முகமாக இலங்கை வங்கியானது, உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு தமது புலமைப்பரிசில் நிகழ்ச்சியை ‘BOC நெனஜய’ என்னும் பெயரில் மீண்டும் ஆரம்பித்தது.

இவ்விழா, 2018 செப்டெம்பர் 01ஆம் திகதி சனிக்கிழமை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH) புலமைப்பரிசில், வெற்றியாளர்கள் 562 பேருக்கு அவர்களது பெற்றோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.  

இத்தினத்தில் இலங்கை வங்கி 2016/2017 ஆகிய ஆண்டுகளில் விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை, பொறியியல், தொழில் நுட்பம், உயிர் தொழில் நுட்பம் மற்றும் பொதுப்பாட விதானங்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தகுதியாளர்களாகிய 1810 கணக்குவைத்திருப்போருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. நாடு பூராக தேசிய ரீதியில் ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்றுள்ள நூற்று ஐம்பத்திரெண்டு (152) மாணவர்களுக்கு தலா 48,000 ரூபாய் பெறுமதியான திறமைப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஏனைய மாணவர்கள் 400 பன்னிரெண்டு பேர் மாவட்ட ரீதியில் பெற்ற புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு தலா 36,000 ரூபாய் பெறுமதி வாய்ந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. இதன் பிரகாரம் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி தகைமைபெற்ற 562 மாணவர்களுக்கு மொத்தம் ரூபாய் 32.5 மில்லியன் வழங்கப்பட்டன.  

கல்வியின் நிமித்தம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக அரசாங்கம் தயாரித்துள்ள அரங்கை ஒத்ததாக இலங்கை வங்கி நாட்டில் பெறுமதிவாய்ந்த இளைஞர் சேமிப்பு கணக்கொன்றாகிய BOC 1810 உடன் இணைந்து ‘மகாபொல’ புலமைப்பரிசில் நிகழ்ச்சி ஊடாக இவ் ஆரம்ப நடவடிக்கையை தயாரித்துள்ளது. இதன் பிரகாரம் திறமைப் புலமைப்பரிசிலானது, நான்கு வருடங்களுக்கும், வழமையான புலமைப் பரிசிலானது மூன்று வருடங்களுக்கும் அவர்களது மேலதிகச் செலவுகளுக்காக வழங்கப்படுகின்றன.

இலங்கை வங்கியானது இவ் வருடாந்த புலமைப் பரிசில் வழங்கல் நிகழ்ச்சியை நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்தும் முகமாக தமது கல்வி ஊடாக அதிஉயர் திறமைகளை அடைவதற்காக இலங்கையில் இளம் சந்ததியினரை வலுவூட்டவும் ஊக்கப்படுத்தவும் வங்கியின் தொகுதி சமூகப் பொறுப்பின் ஆரம்ப நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2003ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்துகின்றது.

இது வரை இலங்கை வங்கி தொடர்ச்சியாக தமது கணக்கில் ரூபா 68 மில்லியனுக்கு 1707 புலமைப்பரிசில்களை வழங்கி உள்ளது. 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த (உயர்தர) பரீட்சைக்கு தோற்றி சம்பந்தப்பட்ட ஆண்டில் ஜனவரி 01 தொடக்கம் டிசெம்பர் 31 வரை தொடர்ச்சியாக தமது கணக்கில் ரூபாய் 5,000/- நிலுவையை பேணியுள்ள மாணவர்கள் மற்றும் 2017ஆம் ஆண்டில் 10,000/- நிலுவையை பேணியுள்ள மாணவர்கள் புலமைப்பரிசிலில் கலந்துகொள்ள தகைமையுடையோராவர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .