2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரி குறைப்புக்கு அரசாங்கத்துக்கு நன்றி

Gavitha   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு தசாப்த காலமாக தொழிற்பட்டு வருகின்ற தரைஓடுகள் மற்றும் சுகாதார உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம், 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாசிப்பின் போது, தரைஓடுகள் மற்றும் சுகாதார உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் நாடெங்கிலுமுள்ள தரைஓடுகள் மற்றும் சுகாதார உற்பத்திப் பொருட்களின் நுகர்வோருக்கு ஆதரவளிக்கும் வகையில் திட்டங்களை முன்வைத்த​ைமக்கு நன்றி தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவால் அண்மையில் முன்வைக்கப்பட்ட பாதீட்டு வாசிப்பில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற ஓடுகள் மற்றும் சுகாதார உற்பத்திப் பொருட்களின் தீர்வை மற்றும் செஸ் வரிகளுக்கான குறைப்பு, அரசாங்கத்தால் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளது என்று ​ெதரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு ஆதரவளிக்கும் வகையில், தொழில்முறையான, சகிப்புத்தன்மை கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றியமைக்காக, அமைச்சர் கருணாநாயக்க மற்றும் அவரது அதிகாரிகளுக்கு ஓடுகள் மற்றும் சுகாதார உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் தமது நன்றியைத்  தெரிவித்துக் கொள்கின்றனர்.  

தம்மீது விதிக்கப்பட்ட தீர்வை மற்றும் செஸ் வரிகள் காரணமாக ஓடுகள் மற்றும் சுகாதார உற்பத்திப் பொருட்களின் உற்பத்திகளின் இறக்குமதியாளர்கள்  கடந்த காலங்களில் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டில், தரைஓடுகள் மற்றும் சுகாதார உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி தீர்வைகளில் குறைப்புக்களை மேற்கொண்டிருந்த அமைச்சர் கருணாநாயக்க, 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், அவற்றைத் தொடர்ந்தும் பேணுவதாக அறிவித்துள்ளதுடன், அதன் பலனாக, ஓடுகள் மற்றும் சுகாதார உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்துக்கு  அரசாங்கத்தின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். 160% ஆகக் காணப்பட்ட இறக்குமதி தீர்வை மற்றும் செஸ் வரிகளை கடந்த ஆண்டு பாதீட்டின் ​ேபாது குறைப்பதற்கு உதவியிருந்த அமைச்சர் கருணாநாயக்க, அண்மைய பாதீட்டில், கட்டுப்படுத்தப்பட்ட சதவீதம் தொடர்ந்தும் பேணப்படுவதை உறுதி செய்துள்ளார்.  

“இத்தொழிற்று​ைறயானது, சந்தையில் பாரிய ஆபத்துக்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய ஒரு நிலைமையில் காணப்பட்டது. ஆகவே நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு, ஒரு நிவாரண பொறிமுறையைப் பேண விரும்பினோம். ஒரு அமைப்பு என்ற வகையில் நியாயபூர்வமான வழியில் இந்த விடயம் அணுகப்படல் வேண்டும் என்பது எமது கருத்து. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்றுறையில் அவர்களின் இருப்பு ஆகியவற்றை நாம் மதிப்பதில், எவ்விதத்திலும் சந்தேகப்படத் தேவையில்லை. தொழிற்றுறையில் ஏனைய பல்வேறுபட்ட தேவைகளை ஈடுசெய்வதில், ஓடுகள் மற்றும் சுகாதார உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியாளர்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். அண்மைய பாதீட்டில், அமைச்சர் கருணாநாயக்கவின் தொடர்ச்சியான தலையீடு ஆகியவற்றின் பலனாக, இந்த உற்பத்திகளை நியாயமான விலைகளில் வழங்குவதற்கு இறக்குமதியாளர்களுக்கு மீண்டும் வழிகிடைத்துள்ளது” என்று ஓடுகள் மற்றும் சுகாதார உற்பத்திப் பொருட்களின் உற்பத்திகளின் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவரான காமில் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .