2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆர்பிகோ 'மெரி வீல்ஸ்' ஹூன்டாய் சான்ட்ரா ஜீப் வெற்றியாளரிடம் கையளிப்பு

Super User   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இலங்கையின் முன்னணி சுப்பர் மார்க்கெட் தொடரான ஆர்பிகோ சுப்பர் சென்டர், தமது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த 'மெரி வீல்ஸ்' எனும் அன்பளிப்பு திட்டதில் சுமார் 6.5 மில்லியன் ரூபா பெறுமதியான அதிசொகுசு வாய்ந்த ஜீப் வண்டி ஒன்றை, போட்டியில் வெற்றியீட்டிய நுகேகொட பகுதியைச் சேர்ந்த ஜாலிய தேவேந்திரவுக்கு பரிசாக வழங்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு அண்மையில் வத்தளையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட முற்றிலும் சூழல் பாதுகாப்பான சுப்பர் சென்டரில் இடம்பெற்றது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஆரம்பமாகியிருந்த இந்த விசேட திட்டமானது நவம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் ஜனவரி 2 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. 500000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் இந்த திட்டத்துக்காக தெரிவாகியிருந்ததுடன், இது வரை சுப்பர் சென்டரினால் முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட திட்டங்களின் பெருமளவு வெற்றி பெற்ற திட்டமாக அமைந்திருந்தது.

இத்த அன்பளிப்பு திட்டத்துக்கு தெரிவாவதற்கு வாடிக்கையாளர் செய்ய வேண்டியிருந்தது, தெரிவு செய்யப்பட்ட 15 பொருட்களில் 03 பொருட்கள் உள்ளடங்கலாக 3000 ரூபா பெறுமதியான பொருட்களை ஒரே தடவையில் கொள்வனவு செய்து அத்துடன் வழங்கப்படும் கூப்பனை பூர்த்தி செய்து சுப்பர் சென்டர்களில் அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியினுள் இடுவது மாத்திரமாகும்.

இந்த பரிசு வழங்கும் நிகழ்வு குறித்து றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியின் தலைவர் கலாநிதி. சேன யத்தெஹிகே கருத்து வெளியிடுகையில், 'ஒவ்வொரு வருடமும் பண்டிகைக் காலத்தில் எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் பெருமளவான பரிசில்களை வழங்குவதுண்டு. மாபெரும் பரிசுக்கு மேலதிகமாக 10000 உடனடி பரிசு வாய்ப்புகளையும் நாம் வழங்கியிருந்தோம். ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் காலம் பூராகவும் வாடிக்கையாளருக்கு ஞாபகம் இருக்கக் கூடிய வகையில் பெறுமதியான மாபெரும் பரிசை நாம் வழங்குவது வழமையாகும். இம் முறை நாம் வழங்கிய ஹுன்டாய் சான்ட்ரா ரக ஜீப் வண்டியின் வெற்றியாளர் எப்பொழும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இதை கொள்வார் என நம்புகிறேன்' என்றார்.

இது குறித்து அதிசொகுசு ஜீப் வண்டியின் வெற்றியாளரான ஜாலிய தேவேந்திர கருத்து தெரிவிக்கையில், 'இது உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு அனுபவமாகும். எனது வாழ்க்கையில் முதல் முறையாக அதிர்ஷ்டம் ஆர்பிக்கோ சுப்பர் சென்டர் மெரி வீல்ஸ் மூலம் கிட்டியுள்ளது' என்றார்.

ஆர்பிக்கோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அன்ட்ரு டால்பி கருத்து தெரிவிக்கையில், 'ஆர்ப்பிகோ சுப்பர் சென்டர்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான சொப்பிங் அனுபவம் கிடைக்கிறது. எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் நாம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறோம். வத்தளை சுப்பர் சென்டர் ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலப்பகுதியிலேயே வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மாதாந்தம் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சொப்பிங் செய்கின்றனர். எதிர்காலத்தில் நாம் இது போன்ற மேலும் பல சுப்பர் சென்டர்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
 
மெரி வீல்ஸ் திட்டத்தின் மாபொரும் இறுதிப் பரிசான அதிசொகுசு ஹுன்டாய் சான்ட்ரா ரக ஜீப் வாகனத்தை வெற்றியாளரான ஜாலிய தேவேந்திர பெற்றுக் கொள்கிறார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .