2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிளை விஸ்தரிப்பில் ஈடுபடும் கொமர்ஷல் கிரடிட்

A.P.Mathan   / 2011 நவம்பர் 14 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனமான கொமர்ஷல் கிரடிட், அதன் புதிய கிளையை இல.6, மங்கல விதி, கம்பஹாவில் அண்மையில் திறந்து வைத்து, அதன் கிளை வலையமைப்பை 22ஆக உயர்த்தியுள்ளது.

கொமர்ஷல் கிரடிட்டின் தலைவர் திருமதி வாக்தேவி பெர்னாண்டோ, பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷhன் எகொடகே மற்றும் தொழில்புரியும் பணிப்பாளர் திருமதி கேயா எகொடகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதற்கு சில தினங்களுக்கு முன்னர் கொமர்ஷல் கிரடிட் தனது புதிய கிளைகளை இல.231, ஹைலெவல் வீதி, நுகேகொட மற்றும் இல.115, புதிய காலி வீதி, மொரட்டுவ ஆகிய இடங்களில் திறந்து வைத்துள்ளது.

கொமர்ஷல் கிரடிட், இலங்கை முழுவதும் விஸ்தரிக்கப்படும் அதேவேளை, இலங்கையின் நிதித்துறையில் தனது முத்திரையை பதித்து, அதன் சாதனைமிக்க வெற்றி மற்றும் அங்கீகாரத்தை மென்மேலும் தொடர்ந்து, அதன் வெற்றிகரமான பாதையில் தடம் பதித்து செல்கின்றது.

கொமர்ஷல் கிரடிட்டின் தலைவர் திருமதி வாக்தேவி பெர்னாண்டோ தெரிவிக்கையில், 'கண்டி, நுவரேலியா மற்றும் பதுளையைத் தொடர்ந்து, மேல் மாகாணத்திற்கு எம்மை விஸ்தரிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாடு முழுவதும் எமது வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் சிறப்பான சேவை மற்றும் வாடிக்கையாளர் உறவை இங்கும் வழங்க எமக்கு முடியுமாயுள்ளது'.

கம்பஹா, மொரட்டுவ மற்றும் நுகேகொட மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களிலுள்ள பொதுமக்களுக்கு, பரந்த உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்க நாம் இப்போது தயாராக உள்ளோம். நிலையான வைப்பு, குத்தகை, வாடகைக் கொள்வனவு, தனிப்பட்ட கடன், தங்கக் கடன், கல்விக் கடன், காணி விற்பனை மற்றும் நுண் கடன் ஆகியன அவற்றுள் அடங்கும்.

மேல் மாகாணத்துக்கு புதிய வரவான நிறுவனத்தின் அண்மைய வெற்றிகரமான செயற்பாடுகள், இத்துறையில் நம்பிக்கை, அங்கீகாரம் மற்றும் மதிப்பை பெற்றுக் கொடுத்துள்ளது. புதிய முகாமைத்துவத்தின் கீழ் அதன் செயற்பாடுகள், புரட்சிகரமான தந்திரோபாயத்தின் பலத்தை நிரூபித்துள்ளது.

புதிய முகாமைத்துவம் பொறுப்பேற்கும் பொழுது ரூ.1.5 பில்லியனாக காணப்பட்ட நிறுவனத்தின் சொத்துகள் தற்போது ரூ.6.8 பில்லியனாக காணப்படுகின்றது. 2009/10 நிதி ஆண்டில் கொமர்ஷல் கிரடிட் நிறுவனமானது நட்டத்தில் சென்ற போதும், 2010/11 நிதி ஆண்டில் இந்நிறுவனமானது ரூ.325 மில்லியன் வரிக்கு முந்திய இலாபத்தை ஈட்டியுள்ளது.

கொமர்ஷல் கிரடிட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷhன் எகொடகே தெரிவிக்கையில், 'நாம் கடந்த 29 ஆண்டுகளாக செயற்படுகின்றோம். இக்காலப்பகுதியில் இலங்கை முழுவதுமுள்ள மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை நாம் ஊக்குவித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக, ஒரு தந்திரோபாய வியாபார பங்காளியாக, பலதரப்பட்ட நிதி வசதிகள் மூலம் அவர்களின் வியாபாரங்களுக்கும் நாம் ஆதரவளித்து வந்துள்ளோம். புதிய கிளைகள் எமது நாடளாவிய வலையமைப்புக்கு சக்தியூட்டுவதுடன், அந்த நகரங்கள் மற்றும் சுற்றியுள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை' எனத் தெரிவித்தார்.

இலங்கை முழுவதுமான கிளை வலையமைப்பை 22ஆக அதிகரித்துள்ள அதேவேளை, நிதிச் சேவைத் துறையில் தேசிய உந்துசக்தியாக திகழும் நிறுவனத்தின் திட்டத்துடன் இணைந்ததாக மேலதிக விஸ்தரிப்பு திட்டங்களும் உள்ளன.

Caption for PHOTO - Chairperson of Commercial Credit PLC, Mrs. Vagdevi Fernando cuts the ribbon to ceremonially inaugurate the Moratuwa Branch. Also in the picture are Working Director Mrs. Geya Egodage and CEO Mr. Roshan Egodage


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .