2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் மூலம் 'ரீ கலர் சோர்ட்டர்' இயந்திரம் அறிமுகம்

A.P.Mathan   / 2011 நவம்பர் 30 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு அனுகூலத்தை வழங்கும் வகையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் தரத்தை அதிகரிக்கும் வகையில், 'ரீ கலர் சோர்ட்டர்' (Tea Color Sorter) இயந்திரத்தை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயந்திரம் சீனாவின் அனுஹுய் சோன்க்கே ஒப்டிக் இலெக்ட்ரொனிக் கலர் சென்டர் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படுகின்றது. இந்த புதிய கலர் சோர்ட்டர் இயந்திரங்களின் மூலம் இலங்கையில் தேயிலை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலையின் தரத்தை பாதிக்கும் அனைத்துவிதமான சேர்மானங்களும் அகற்றப்படுகிறது. இதன் மூலம் இலங்கையின் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் அதிகளவு கேள்வியையும் பெறுமதியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுவரையில் இலங்கைக்கு ஜப்பானிலிருந்து 'கலர் சோர்ட்டர்' இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இவற்றின் விலை மதிப்பு அதிகளவில் காணப்பட்டமையால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தாம் தயாரிக்கும் தேயிலையின் தரத்தை உயர்நிலையில் பேணுவற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் மூலம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 'கலர் சோர்ட்டர்' இயந்திரங்களின் மூலம் இந்த நிலைக்கு இலகுவான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 'கலர் சோர்ட்டர்' இயந்திரங்கள் தயாரிப்பில் ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகள் முன்னிலை வகித்து வந்திருந்த போதிலும், அண்மைக்காலமாக சீனாவிலிருந்து தயாரிக்கப்படும் இயந்திரங்களுக்கு சந்தையில் அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது. ஜப்பானிய தொழில்நுட்பத்துக்கு நிகராக தயாரிக்கப்படும் இந்த இயந்திரங்களின் விலை ஜப்பானிய தயாரிப்புகளை விட 50 வீதம் வரை குறைவாக பெற்றுக்கொள்ள முடியும்.

றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த 'கலர் சோர்ட்டர்' இயந்திரங்கள் தேயிலையின் தரத்தை உயர்த்துவதற்காக பயன்படுத்தப்படும் நிற அல்லது கறுப்பு வெள்ளை கமிராக்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த இயந்திரங்கள் வௌ;வேறு அளவுகளில் காணப்படுவதுடன், அந்த அளவுகளுக்கு அமைவாக தேயிலையின் தரத்தை அதிகரித்து பெற்றுக்கொள்ளக்கூடிய நிறையின் அளவும் வித்தியாசப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தமது தேவைகளுக்கு அமைவாக இந்த இயந்திரங்களின் அளவுகளை தெரிவு செய்துகொள்ள முடியும்.

இந்த இயந்திரங்களின் இறக்குமதி தொடர்பாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் வர்த்தக பிரிவின் பணிப்பாளரான விவில் பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'இலங்கைத் தேயிலைக்கு எப்போதும் சர்வதேச சந்தையில் சிறந்த வரவேற்பு நிலவிய போதிலும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமையினால் போட்டிகரத்தன்மை அற்றுப்போகிறது. இந்நாட்டின் மிகப்பெரிய பெருந்தோட்டக் கம்பனியாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தேயிலை தொழிற்சாலைகள் 28 இனை கொண்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் இந்த புதிய இயந்திரங்களை பயன்படுத்தும் முன்னர் பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் விளைவுகள் சாதகமாக இருந்தமையை தொடர்ந்தே நாம் அவற்றை உபயோகிக்க தீர்மானித்தோம். இந்த இயந்திரங்களின் மூலம் தேயிலையின் தரத்தை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக்கொள்ள முடிந்தது. இதன் பின்னரே இந்த இயந்திரங்களை எமது வர்த்தக பிரிவினூடாக வியாபாரத்திற்காக இறக்குமதி செய்ய திட்டமிட்டோம். இலங்கையில் சுமார் 80 வருட கால வரலாற்றைக் கொண்ட நிறுவனமாக றிச்சர்ட் பீரிஸ் செயற்பட்டு வருவதுடன், சீனாவின் உயர் தரத்தில் அமைந்த 'கலர் சோர்ட்டர்' இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்து வழங்குவதன் மூலம் உயர்தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் அந்நிறுவனத்தின் மூலம் அரிசி மற்றும் தானிய வகைகளுக்காக பயன்படுத்தப்படும் 'கலர் சோர்ட்டர்' இயந்திர வகைகளையும் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

படவிளக்கம்:
சீனாவின் அனுஹுய் சோன்க்கே ஒப்டிக் இலெக்ட்ரொனிக் கலர் சென்டர் நிறுவனத்தின் விநியோக பங்காளராக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தை நியமிக்கும் உடன்படிக்கையை, அனுஹுய் சோன்க்கே ஒப்டிக் இலெக்ட்ரொனிக் கலர் சென்டர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் காஓ ஷேன் மூலம் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் வர்த்தக பிரிவின் பணிப்பாளரான விவில் பெரேராவிடம் கையளிப்பதையும் அருகில் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் பொறியியலாளர் சரத் பண்டார மற்றும் சீன நிறுவனத்தின் பொறியியலாளரையும் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .