2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வருட இறுதியை அணுகும் போது உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்டோபர் மாதத்தில் உலகப் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளதென சர்வதேச நிறுவனமான ஜேபி மோர்கன் அறிவித்துள்ளது. இதற்கு பிரதான காரணமாக உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அமைந்துள்ளதென அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜேபி மோர்கனின் சர்வதேச அனைத்து துறை வெளிபாட்டு சுட்டி செப்டெம்பர் மாதத்தில் பதிவாகியிருந்த 52.3 புள்ளிகளிலிருந்து, ஒக்டோபர் மாதத்தில் 51.3 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்திருந்தது. உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், பாரியளவிலான சேவைத்துறை வளர்ச்சியடைந்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய பிராந்தியத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி சர்வதேச பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தி வருவதாகவும் ஜேபி மோர்கன் குறிப்பிட்டுள்ளது. (ரொய்ட்டர்ஸ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .