2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரவு - செலவு திட்டம் சமர்ப்பித்தமையை தொடர்ந்து பங்குச்சந்தை நடவடிக்கைகளில் முன்னேற்றம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 11 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

மூலதன சந்தை தொடர்பில் 2013ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்த பிரேரணைகளை தொடர்ந்து வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கைகளில் அதிகரிப்பை அவதானிக்க முடிந்தது. வியாழக்கிழமை நாடாளுமன்றில் வரவு - செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்ட பங்குச்சந்தை நடவடிக்கைகள், வெள்ளிக்கிழமை முன்னேற்றம் காண்பித்திருந்தன.    

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5589.43 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 5152.98 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3034.60 ஆகவும் அமைந்திருந்தன.

நவம்பர் 05ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 2,168.187.859 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 21,817 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 20,986 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 831 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் செலின்சிங், ஜிஎஸ் பினான்ஸ், போகல கிராஃபைட், என்வி றிசோர்சஸ் (உரிமைப்பங்குகள்) மற்றும் உடபுசல்லாவ போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

கீல்ஸ் புட்ஸ், ஆசிரி சென்ரல், அமாயா லெய்ஷர், யூனியன் கெமிக்கல்ஸ் மற்றும் மக்வுட்ஸ் எனர்ஜி போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 58,400.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 53,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலையிலும் சற்று அதிகரிப்பு காணப்பட்டதாக தங்க நகை வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1500.00 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.35 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 212.06 ஆக காணப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .