2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கையில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை 3.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2012 ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலப்பகுதியில் இந்த பெறுமதி பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. முன்னைய ஆண்டில் இதே காலப்பகுதியில் இந்த பெறுமதி 4.3 வீதமாக காணப்பட்டது. இந்த எண்ணிக்கை 2011 ஜூன் மாதத்தில் 351,000 ஆக காணப்பட்டதாகவும், இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 307,000 ஆக குறைவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆயினும் இந்த காலப்பகுதியினுள் 15 – 19 வயதுக்குட்பட்டவர்களிடையிலான வேலையில்லா வீதம் 18.7 வீதமாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 15.5 வீதமாக காணப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டில் வேiவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .