2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

CBL விநியோகஸ்தர் மாநாடு மற்றும் விற்பனை நட்சத்திர விருது வழங்கும் நிகழ்வு

A.P.Mathan   / 2013 ஜூலை 31 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


உள்ள தமது விற்பனை குழுவினரின் சிறப்பான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இலங்கை சொக்லட் துறை முன்னோடியான சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனமானது, CBL குழுமத் தலைவர் மினேக விக்ரமசிங்க தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட '2012/13 வருடாந்த விநியோகஸ்தர் மாநாடு மற்றும் விற்பனை நட்சத்திர விருது' வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இந் நிகழ்வில் CBL விற்பனை குழுவில் சிறப்பாக செயலாற்றியவர்கள் மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக CBL தயாரிப்புகளை விற்பனை செய்துவரும் விநியோகஸ்தர்கள் போற்றி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் நாடுபூராகவுமுள்ள விநியோகஸ்தர்கள், விற்பனை குழு உறுப்பினர்கள், குழுமப் பணிப்பாளர்கள், வெளிநாட்டு வர்த்தக பங்காளர்கள் மற்றும் CBL நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
 
இந் நிகழ்வில் சிபிஎல் குழுமத்துடன் நீண்டகாலமாக இணைந்து செயலாற்றிய விநியோகஸ்தர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மஞ்சி பிஸ்கட் விற்பனையில் ஈடுபடும் கடவத்த விற்பனை அதிகாரி எரங்க கயான் விதானகே அவர்களிற்கு B பிரிவில் குழுமத்தின் 'சிறந்த விற்பனை நட்சத்திர விருது' வழங்கப்பட்டது. றிட்ஸ்பரி மற்றும் டியாரா தயாரிப்புகளை விற்பனை செய்யும் பிரதேச விற்பனை அதிகாரி சுபுன் அயந்த சில்வாவிற்கு A பிரிவில் 'சிறந்த நட்சத்திர விருது' வழங்கப்பட்டது. லங்கா சோய் மற்றும் சமபோஷ விற்பனையில் சிறந்த செயற்பாட்டிற்காக பிரேம்லால்; தர்மசேனவிற்கு C பிரிவில் 'சிரேஷ்ட நட்சத்திர விருது' வழங்கப்பட்டது. மேலும் மூன்று பிரிவுகளின் கீழும் கனிஷ்ட விற்பனை அதிகாரிகள் பிரிவில் சிறப்பான செயற்பாட்டிற்காக 'கனிஷ்ட நட்சத்திர விருது' C பிரிவைச் சேர்ந்த நிலந்த மென்டிஸ் அவர்களிற்கு வழங்கப்பட்டது.
 
'Sustaining Supremacy' எனும் தொனிப்பொருளின்; கீழ் முன்னெடுக்கப்பட்ட CBL 2012/13 நிதியாண்டிற்கான விற்பனை இலக்கு வெற்றி பெற்றது. இந் நிகழ்வில் எதிர்வரும் நிதியாண்டிற்கான தொனிப்பொருளாக 'Better Than the Best – Challenge Yourself' அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் விற்பனை குழு உறுப்பினர்கள் இத் தொனிப்பொருளை சிறப்பாக பின்பற்றுவோம் என உறுதியளித்தனர். CBL குழுமத்தின் ஒவ்வொரு சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர்களும் 2012/13 நிதியாண்டிற்கான தமது வர்த்தகநாமங்களின் சாதனைகள் குறித்து அறிவித்தனர். CBL குழுமத்தின் வர்த்தகநாமங்களிடையே லங்கா சோய், சமபோஷ, மஞ்சி மற்றும் றிட்ஸ்பரி ஆகியன விற்பனையில் உயர் சாதனை படைத்தன. சிபிஎல் விற்பனை குழுவினர் கடந்த வருடம் க்ராக்கர், வேஃபர்ஸ், மாரி மற்றும் லெமன் பஃப் ஆகிய வர்த்தகநாமங்களை சந்தை முன்னோடியாக தக்கவைப்பதில் சாதனை படைத்தனர். 
 
இந் நிகழ்வில் மஞ்சி, றிட்ஸ்பரி, சமபோஷ மற்றும் லங்கா சோய் வர்த்தகநாமங்களின் கீழ் பல புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. இப் புதிய தயாரிப்புகளின் ஊடாக நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளின் வளர்ச்சியில் பங்களிப்பை செலுத்த எண்ணியுள்ளோம்.
 
முந்தைய விநியோகஸ்தர் மாநாட்டில் உரையாடிய டாக்டர்.பீ.பி.ஜயசுந்தரவின் கருத்துப் பிரகாரம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரும், குழும பணிப்பாளருமான நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில், 'பல்கலைக்கழகத்திற்கு ஈடான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் CBL குழுமத்துடன் சேர்ந்து முன்னேறிய பலரது வெற்றிப் பயணத்திற்கு சான்றாக உள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். இந்த விநியோகஸ்தர் மாநாடு மற்றும் நட்சத்திர விருது வழங்கும் நிகழ்வின் மூலம் எமது விற்பனை குழுவினரை ஊக்குவித்துள்ளோம் என நம்புகிறோம். CBL நிறுவனமாகிய நாம், தமக்காக மாத்திரமன்றி தேசத்திற்காகவும் உழைக்கக்கூடிய இலங்கையர்களை உருவாக்கியுள்ளோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் அவர்களின் சேவை சிபிஎல் நிறுவனத்திற்கும், தேசத்திற்கும் கிடைக்கும் என்பதை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன்' என்றார்.
 
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் அனைவரினதும் கவனத்தை பெரிதும் ஈர்த்திருந்த நிகழ்வாக,  கடந்த ஆண்டின் மஞ்சி சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் அமைந்தன. மஞ்சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் புலமைப்பரிசிலுக்கு உரியவர் தமது கல்வியை ருகுணு பல்கலைக்கழகத்தில் தொடர்வதற்கான மேலதிக புலமைப்பரிசிலை பெற்றுக்கொண்டார். அவர் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக்கு ஆதரவு வழங்கிவரும் CBL நிறுவனத்திற்கு தனது உளம்கனிந்த நன்றியை தெரிவித்தார். மஞ்சி டிகிரி புலமைப்பரிசில்தாரராக CBL உடன் இணைந்து தற்போது பிரதேச விற்பனை அதிகாரியாக விளங்குபவரிடமிருந்து இப் புலமைப்பரிசிலை பெற்றமை அனைவரையும் கவரும் நிகழ்வாக அமைந்தது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .