2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“NATURES SECRETS”இற்கு இரண்டாவது வருடமாகவும் தேசிய பசுமை விருது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 13 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுற்றாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் இருந்து வரையறுக்கப்பட்ட இயற்கை அழகுசாதன உற்பத்தி நிறுவனத்தின் பணிப்பாளரும், பொது முகாமையாளருமான ஆதித்ய கெக்குலாவல விருதினை பெற்றுக்கொண்டார்

இயற்கை அழகுசாதன தயாரிப்புகளுக்காக (NBC), இலங்கையின் முதல்தர, மூலிகையிலான “அழகு சாதன உற்பத்திப் பொருட்களான “NATURES SECRETS”, சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்குகின்ற மத்திய சுற்றாடல் அதிகாரசபை சமீபத்தில் நடத்திய 2012ஆம் ஆண்டிற்கான தேசிய பசுமை விருது விழாவில், தேசிய பசுமைக்கான கௌரவ விருதினை பெற்றுக்கொண்டது. உண்மையான உறுதிப்பாட்டுடனும், விரையங்களை குறைத்து உரிய முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்புடன் இயற்கை வளங்களை கையாளுவதில் முன்னோடியாகவும், புதுப்பிக்க முடியாத வளங்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்காகவும் இயற்கை அழகுசாதனப் படைப்புகளுக்கான இந்த விருது தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் கிடைத்துள்ளது. சந்தையில் காணப்படுகின்ற பல்வேறு உள்ளூர் அழகுசாதனப் படைப்புகளுக்கு மத்தியில் “NATURES SECRETS” இற்கு இந்த விருது வழங்கப்பட்டமை உண்மையில் குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாகும்.

ஐரோப்பாவினால் அங்கீகரிக்கப்பட்ட GMP, ISO 9001 மற்றும் ISO 14001 ஆகிய தர நிர்ணயங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்ற இலங்கையின் ஒரே அழகுசாதனப் படைப்பு “NATURES SECRETS” ஆகும். தமது அதி நவீன தொழிற்சாலை வசதிகள், கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை மற்றும் அழகுசாதன படைப்புகள் பற்றிய மூலிகை வைத்தியத்தில் நீண்டகால தேர்ச்சி போன்ற காரணிகளால் சர்வதேச தரம் வாய்ந்த நவீன சர்வதேச தரத்திலான அழகுசாதன படைப்புகளை அது வழங்குகிறது. அதன் தொழிற்சாலை வளாகத்தில் இயற்கை அழகுசாதன உற்பத்திகளுக்காக 500இற்கும் மேற்பட்ட அரிய மருத்துவ தாவர வகைகள் கொண்ட ஒரு வளமான மூலிகை தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களால் மருத்துவ தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளை ஊக்குவிக்க ஒரு தாவர ஆராய்ச்சி மையமும் நிறுவப்பட்டுள்ளது. தாவர ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும், மருத்துவ ரீதியான தாவரங்கள் தொடர்பான கற்கைகளுக்காகவும் இலங்கையில் தாவர ஆராய்ச்சி மையத்தைக் கொண்டுள்ள ஒரே தனியார்துறை நிறுவனமாகவும் அது திகழ்கின்றது. இலங்கையின் எதிர்கால சந்ததியினரிடையே அரிய பெறுமதியான மருத்துவ தாவரங்களை ஊக்குவித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய நோக்கங்களுக்காக அதிநவீன தாவர திசு கலாசார ஆய்வு நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் இலங்கை மூலிகை அழகு சாதன தயாரிப்புகளை உலகளாவிய தரத்தில் உருவாக்க வேண்டும் என்ற தனது நோக்கில் கடந்த பத்தாண்டு காலமாக “NATURES SECRETS” படிப்படியாகவும், திடமாகவும் முன்னேற்றம் கண்டுவருகிறது. அவர்களின் இந்த நோக்கத்தின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் “NATURES SECRETS” தயாரிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அந்த தயாரிப்புகள் தெற்கு மற்றும் தென் கிழக்காசியா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் வலயங்களின் பல நாடுகளில் இப்போது கிடைக்கிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .