2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

செலான் "த கேஸ் ஸ்டடி"க்கு சர்வதேச தங்க கிரீடம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்க தொடர்பாடல் நிபுணர்களின் சங்கத்தின் வருடாந்த அறிக்கை போட்டியின் ஏற்பாட்டில் நடைபெற்ற விஷன் விருதுகள் 2009இல், செலான் வங்கியின் 2009ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையான "த கேஸ் ஸ்டடி" இரண்டு தங்க விருதுகளை பெற்றுள்ளது.

செலான் வங்கியானது, வங்கித்துறை பிரிவில் "சிறந்த வருடாந்த அறிக்கை"க்கான தங்க விருதை பெற்றுக் கொண்ட அதேவேளை, "ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மிகவும் மேம்படுத்தப்பட்ட வருடாந்த அறிக்கை"க்கான தங்க விருதையும் பெற்றுக் கொண்டது. மேலும், அண்மையில் நடைபெற்ற 24ஆவது ARC சர்வதேச விருதுகள் 2010இல், செலான் வங்கியானது ஒரு தங்கம், மூன்று வெண்கலம் மற்றும் கௌவர விருதுகளையும் பெற்றுக்கொண்டது.

"தலைவரின் கடிதத்துக்கு" தங்க விருதும், "பாரம்பரியமற்ற வருடாந்த அறிக்கை", "அட்டைப் படம் / வடிவமைப்பு" மற்றும் "உள்ளக வடிவமைப்பு" போன்றவற்றுக்கு வெண்கல விருதுகளையும் பெற்றுக் கொண்டது. அத்துடன், "புகைப்பட"த்துக்கு கௌரவ விருது வழங்கப்பட்டது.

செலான் வங்கியின் தலைவர் ஈஸ்ட்மன் நாரங்கொட, "இந்த விருதுகள், வங்கியின் செயற்பாடு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு கிடைத்த சர்வதேச கௌரவம்" என தெரிவித்தார். "செலான் வங்கி மிகவும் கடினமான காலகட்டத்தில் செல்லும் பொழுது, வாய்ப்புகள் எதுவும் காணப்படவில்லை. வங்கியின் வீழ்ச்சி பற்றி பலர் முன்னுரைத்தனர். மத்திய வங்கியினூடாக சரியான நேரத்துக்கு இலங்கை அரசாங்கம் செயற்பட்டதினால் செலான் வங்கி பீனிக்ஸ் பறவையைப் போன்று மீண்டும் உயிர் பெற்றது".

"எமக்கு பின்னால் மோசமான நிலைமை காணப்பட்டாலும் சாத்தியமான சமிக்ஞைகளை நாம் நோக்கியுள்ளோம் என்ற கருத்தை மிகவும் வெளிப்படையாக வெளிப்படுத்துவதே இந்த "த கேஸ் ஸ்டடி"யின் நோக்கமாகும். இலங்கையின் நிதி அறிக்கையில் ஒரு புதிய மட்டத்தை ஸ்தாபித்துள்ள நாம், இந்த 253 பக்க அறிக்கையை எமது பங்குதாரர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்திய அசாதாரண முயற்சிகளைக் குறித்து இது மிகவும் நுணுக்கமாக ஆராய்கின்றது" என அவர் மேலும் தெரிவித்தார்.

அழகிய படங்கள் மற்றும் மும்மொழி பத்திரிகை செய்திகளின் மீள் பிரசுரம் உள்ளடக்கிய "த கேஸ் ஸ்டடி", இவ்வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தொடக்கம் தற்போதைய இலங்கை நிதி வரலாற்றில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்கு மத்தியில் ஒரு சிறந்த ஆவணம் என புகழ் பெற்றுள்ளது.

செலான் வங்கியின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி தொடக்கம் அதன் வீழ்ச்சி மற்றும் மறுமலர்ச்சி வரையான விபரங்களை உள்ளடக்கிய ஆறு முக்கிய அத்தியாயங்களை "த கேஸ் ஸ்டடி" கொண்டுள்ளது.

அத்தியாயம் 01: "வளர்ச்சி மற்றும் சவால்கள்"

1987ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற சுலோகத்துடனான செலான் வங்கியின் வேகமாக வளர்ச்சி மற்றும் கஷ்டமான  சூழ்நிலைகள் அதிகரித்த வேளைகளில் வெற்றியை தக்கவைத்துக் கொண்டமை.

அத்தியாயம் 02: "நம்பிக்கை தொடர்பான ஒரு சர்ச்சை"

கோல்டன் கீ கம்பனியின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட  நிச்சயமற்ற தன்மை, தவறான அபிப்பிராயம் என்பன தொடர்பான பொதுவானதொரு சூழ்நிலை செலான் வங்கியையும் சூழ்ந்து கொண்டமை.

அத்தியாயம் 03: "துரிதமான மற்றும் தீர்க்கமான செயற்பாடு"

விரைந்து செயற்பட்ட மத்திய வங்கியானது வர்த்தகத்தை ஸ்திரநிலைக்கு கொண்டு வருவதற்காகவும் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்களை  நியமனம் செய்தது.
 
அத்தியாயம் 04: "பொதுமக்களுக்கு மீள நம்பிக்கையூட்டல்"

தெளிவான மற்றும் வெளிப்படையான தொடர்பாடல்கள் மூலமாக மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் வங்கியின் புதிய பணிப்பாளர்  சபையினால் முன்னுரிமையளிக்கப்பட்ட விடயமாக இருந்தது.

அத்தியாயம் 05: "வர்த்தகத்தை கட்டியெழுப்புதல்"

ஒவ்வொரு விடயம் தொடர்பிலும் கடைப்பிடிக்கப்படும் கொள்கைளை ஒரு முறையான அடிப்படையில் மீள் பரிசீலனை செய்வதற்கு எடுக்கப்பட்ட செய்முறை நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க சாதகமான பெறுபேறுகளை ஈட்டித்தந்தன.
 
அத்தியாயம் 06: "சிறந்த எதிர்கால உபாயம்"

பரந்தளவான ஒரு நுட்பவியல் திட்டத்தின் வழிகாட்டுதலுடன் அனைத்து பங்குதாரர்களுக்குமான ஆராக்கியமானதும் நிலையானதுமான எதிர்காலமொன்றை செலான் வங்கி கட்டியெழுப்புகின்றது.

அமெரிக்க தொடர்பாடல் நிபுணர்களின் சங்கம் (LACP), மக்கள் தொடர்பாடல் நிறுவனங்கள் மத்தியில் துறைசார் கலந்துரையாடல்களை ஸ்தாபிக்கவும், அதிசிறப்பான தொடர்பாடல் திறனுடையவர்களை அறிந்து கொள்வதற்காகவும் 2001ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

ஃபோர்ச்சூன் 500 நிறுவனங்களின் முதல் பத்து நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்கள் LACP போட்டியில் கலந்து கொண்டன. வருடாந்தம் அமெரிக்காவில் நடத்தப்படும் உலகளாவிய வருடாந்த அறிக்கை போட்டியில், இவ்வருடம் 28 நாடுகளிலிருந்து 4,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

மெர்கொம் lncயினால் ஏற்பாடு செய்யப்படும் உலகின் மிகப்பெரிய வருடாந்த அறிக்கை போட்டியான, 24ஆவது வருடாந்த சர்வதேச ARC விருதுகள், பெட்டரி பார்க்கில் அமைந்துள்ள ரிட்ஸ் கார்ல்டன் போல்ரூமில் நடத்தப்பட்ட மாபெரும் வைபவத்தில் வழங்கப்பட்டது. 27 நாடுகளைச் சேர்ந்த பத்தொன்பதாயிரம் விண்ணப்பங்களிலிருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சர்வதேச ARC விருதுகள் வருடாந்த அறிக்கை விருதுகளின் ஒஸ்காராக கருதப்படுவதுடன், வருடாந்த அறிக்கை சிறப்புத்தன்மைக்கு கௌரவமளிக்கும் மிகப்பெரிய சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள், அரசாங்க முகவர் நிலையங்கள், இலாபமற்ற நிறுவனங்கள், மற்றும் சங்கங்கள் மற்றும் வருடாந்த அறிக்கைத் தயாரிப்பில் ஈடுபடும் முகவர்களும் தனிநபர்கள் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .