2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாகன ஓட்டுனர்களை ஈர்த்துள்ள ஜனசக்தியின் "புல் ஒப்ஷன் வெஹிகிள் எமர்ஜன்சி" காப்புறுதி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2010இன் முதல் அரையாண்டின் அதிக இலாபமீட்டிய காப்புறுதியாளரான  ஜனசக்தி காப்புறுதி, கடந்த செப்டம்பர் மாதம் அறுமுகப்படுத்திய "ஃபுல் ஒப்ஷன் வெஹிகிள் எமர்ஜன்சி காப்புறுதி"யானது நாடு முழுவதிலுமுள்ள வாகன ஓட்டுனர்களின் விருப்பத்துக்குரிய தெரிவாகி உள்ளது.

இது குறித்து விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான பொது முகாமையாளர் ரவி லியனகே கருத்து தெரிவிக்கையில், 'இலங்கை முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுனர்களிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட பிரதிபலிப்பு மிகவும் உற்சாகமூட்டுவதாக உள்ளது.

ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் காப்புறுதி கொண்டுள்ளவர்கள் மாத்திரமல்லாது, ஏனைய காப்புறுதி நிறுவனங்களில் காப்புறுதிகளைக் கொண்டுள்ளவர்களும் இதில் அடங்குவர்.  அதன் பரந்த வசதிகள் மற்றும் சேவைகள் காரணமாக "ஃபுல் ஒப்ஷன் வெஹிகிள் எமர்ஜன்சி காப்புறுதி' ஒரு புதிய பாதையை திறந்துள்ளதுடன், இலங்கையின் காப்புறுதித் துறை அண்மைய காலங்களில் அனுபவித்துள்ள மிகச்சிறந்த உற்பத்தியாகவும் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இலங்கையின் காப்புறுதித் துறையில் இன்னுமொரு புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த துறைசார் முதலாவதான "ஃபுல் ஒப்ஷன் வெஹிகிள் எமர்ஜன்சி காப்புறுதி", ஒரு நாளைக்கு 24 மணித்தியாலமும், வருடத்தின் 365 நாட்களும் செயற்படும். இது ஜனசக்தி வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமல்லாமல் இலங்கை முழுவதிலும் உள்ள சகல வாகன உரிமையாளர்களுக்குமானதாகும்.

அறிமுகத்தின் பின்னரான முதலாவது அழைப்பு கொள்ளுப்பிட்டியிலிருந்து டப்ளியூ. பீ. எல். கே. அபேகுணவர்தனவிடமிருந்து கிடைக்கப்பெற்றது. இவரின் வாகனத்தில் பெட்ரோல் அடைப்பு ஏற்பட்டு உடனடி இழுத்துச் செல்லும் சேவை தேவைப்பட்டது.

அதே வாரம் விரைவான பழுது பார்த்தல் அணிக்கு தெமட்டகொடயிலிருந்து ஆர். என். ஜயசேகரவிடமிருந்து வாகனம் தொழிற்படவில்லையென அழைப்பு வந்தது. விரைவான பழுதுபார்த்தல் அணியானது ஜம்ப் ஸ்டார்ட் செய்ய முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை. பியூஸ்கள் பரிசோதிக்கப்பட்டு திரும்பவும் இணைக்கப்பட்டன.

திரும்பவும் பெட்டரி பரிசோதிக்கப்பட்டு, எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு எர்த் வயர் துண்டிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பெட்டரி சக்தி இழந்துள்ளதினால் வாகனத்தை ஜம்ப் ஸ்டார்ட் செய்ய முடியாதிருந்தது.  ஜயசேகர புதிய பெட்டரி வாங்க உதவிய அணியினர் அதனை உடனடியாக பொருத்தி, அழைப்பு பெறப்பட்டு சில மணி நேரத்திலேயே, வாகனத்தை ஓடும் நிலைக்கு கொண்டு வந்தனர்.

ஜனசக்தியின் உடனடி வாகன பழுதுபார்த்தல் சேவையானது அழைக்கும் தூரத்தில் உள்ளது என்பதன் மூலம், இலங்கையின் சகல பாகங்களிலும் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள மன அமைதி குறித்து ஜயசேகர பாராட்டினார்.

சொந்த கார்கள் மற்றும் இரட்டை நோக்கு வாகனங்களைக் கொண்டுள்ள எந்தவொரு வாகன ஓட்டுனரும், எந்த நிறுவனத்தில் காப்புறுதியைக் கொண்டுள்ளார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாது, இந்த நன்மைகளை அனுபவிக்கலாம்.

தற்போதுள்ள ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் வாடிக்கையாளர்கள் இதன் நன்மைகளை ரூ. 750 க்கு (வரிகள் உள்ளடங்களாக) அனுபவிக்கலாம். ஜனசக்தியின் மூன்றாவது நபர் காப்புறுதியாளர்கள் இதனை ரூ. 2,500க்கு (வரிகள் உள்ளடங்களாக) பெற்றுக் கொள்ளலாம்.

இதன் போது, மூன்றாம் நபர் காப்புறுதி இலவசமாக வழங்கப்படும். இதற்கு சமாந்தரமாக ஜனசக்தி வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் இந்த காப்புறுதியை ரூ. 2,500க்கு (வரிகள் உள்ளடங்களாக) சகல நன்மைகளுடனும் பெற்றுக் கொள்ளலாம்.

ஜனசக்தி காப்புறுதியின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் பெடி வீரசேகர, "எமது விரைவான பழுதுபார்த்தல் அணியானது, விரைவாக வாடிக்கையாளரை அடையும் விதமாக வேன்கள், சைக்கிள்கள் மற்றும் இழுக்கும் டிரக்குகள் மற்றும் இலங்கை முழுவதும் 130 கராஜ்களின் உதவியுடனான 120 தகைமையுள்ள மற்றும் அனுபவமுள்ள  தொழில்நுட்பவியலாளர்களைக் கொண்டுள்ளது" என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .