2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கிளிநொச்சி விவசாயிகளுடன் கொமர்ஷல் வங்கி

Editorial   / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறிய மற்றும் நடுத்தர (SME) தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக கொமர்ஷல் வங்கி மேற்கொண்டு வரும் செயற்றிட்டத்தின் நன்மைகள்,  கிளிநொச்சி விவசாயிகளுக்கும் கிடைத்துள்ளன. பயிர்ச்செய்கையை இலாபகரமாக்குவதற்கான சிறந்த செயற்பாடுகள் குறித்த தகவல்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் வலுவூட்டப்பட்டுள்ளனர். 

கொமர்ஷல் வங்கியின் அபிவிருத்தி கடன் பிரிவின் ஒத்துழைப்போடு வங்கியின் கிளிநொச்சி கிளை அண்மையில் இந்தப் பிரதேசத்திலுள்ள விவசாய அமைப்புக்களின் 154 பிரதிநிதிகளுக்கான பன்முக கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை மத்திய வங்கியின் பூரண ஒத்துழைப்போடு இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த மாவட்டத்தில் இவ்வகை கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை, இதுவே முதற் தடவையாகும். தொழில்நுட்ப அறிவு பயிர்ச் செய்கை ஆற்றல் தொடர்பான விளக்கம், அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பம், பயிர்ச்செய்கை செலவைக் குறைக்கக் கூடிய புதிய விவசாய உபகரணங்கள் பற்றிய கலந்துரையாடல், பயிர்ச்செய்கை துறையில் இளைய தலைமுறையினரை எவ்வாறு கவர்ந்திழுப்பது என்பது பற்றிய கலந்துரையாடல் என, பல்வேறு அம்சங்கள் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த எல்லா விளக்கங்களும் அரிசி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த இரண்டு துறைசார் நிபுணர்களால் வழங்கப்பட்டன. 

நிதிக் கற்கைகள் பற்றிய பிரதான விளக்கம் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய முகாமையாளர் பி.சிவதீபனால் வழங்கப்பட்டது. பங்குபற்றிய விவசாயிகளின் அனுபவத்துக்கு மேலும் பெறுமதி சேர்க்கும் வகையில் கொமர்ஷல் வங்கியின் விவசாய மற்றும் நுண் நிதிப் பிரிவு வங்கியின் பல்வேறு நிதிச் சேவைகள் பற்றிய புறம்பான விளக்கத்தையும் வழங்கினர். பயிர்ச் செய்கையாளர்கள் தமது விவசாய வர்த்தகத்தை அபிவிருத்தி செய்து கொள்ள இந்த விளக்கம் பிரதான கருவியாக அமைந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .