2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

HSBC Credit Cards இனால் VISA Cashback அட்டை அறிமுகம்

Editorial   / 2018 ஜனவரி 09 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

HSBC, VISA இன்டர்நஷனலுடன் கைகோர்த்து, இலங்கையின் முதலாவது HSBC VISA Platinum Cashback அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய கடன் அட்டை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் தினசரி கொடுக்கல் வாங்கல்களுக்குரிய கொடுப்பனவுகளை எந்தவொரு சுப்பர்மார்க்கெட்டில் அல்லது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேற்கொள்ளும் போது மேலதிக அனுகூலங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.  

இன்றைய காலகட்டத்தில் பலர் பணத்துக்கு மாறாக, பிளாஸ்ரிக் அட்டைகளை அதிகளவு நாடும் நிலையில், இலங்கையில் காணப்படும் கடன் அட்டைகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

சுப்பர்மார்கெட் பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற பிரிவுகளில் தினசரி கடனட்டை மூலமான கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துக்காணப்படுகின்றன. வருடாவருட இரட்டை இலக்க வளர்ச்சியை இது காண்பிக்கிறது. பருவகால சேமிப்புகளை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் அதேவேளை, வருடம் முழுவதும் தமது தினசரி செலவீனங்களை நாட்டின் எப்பகுதியிலிருந்தவாறும் அனுபவிக்கக்கூடிய வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.  

புதிய HSBC VISA Platinum Cashback அட்டை மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான சலுகைகளை வழங்க முன்வந்துள்ளதுடன், மொத்தமாக செலவிடும் தொகையில் 0.1% பணமீளப்பெறுகைகளை பெற்றுக்கொள்ள முடியும். நாடு முழுவதிலும் எந்நேரத்திலும் சுப்பர்மார்க்கெட் பொருட்கள் மற்றும் எரிபொருள் நிரப்புகளையில் 10% பணமீளளிப்புகளை வழங்குகிறது.

இந்த சலுகையை காகில்ஸ், ஆர்பிகோ, கீல்ஸ் சுப்பர், லாஃவ்ஸ் சன்அப், சதொச மற்றும் LIOC, லாஃவ்ஸ் மற்றும் சிபெட்கோ ஆகியவற்றினால் நிர்வகிக்கப்படும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.  

மேலும், சொப்பிங், உணவகங்கள் முதல் பிரயாணங்கள் மற்றும் ஹோட்டல்களில் தங்கியிருப்புகள் போன்றன அடங்கலாக 100க்கும் அதிகமான விற்பனையங்களிலிருந்து 50சதவீதத்துக்கும் அதிகமான விலைக்கழிவுகளுடன், தமது தவணைக்கொடுப்பனவு திட்டங்களின் மீது அட்டை உரிமையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டிவீதங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், உலகளாவிய ரீதியில் 250க்கும் அதிகமான விற்பனையங்களிலிருந்து வங்கியின் ஹோம் அன்ட் எவே பிரிவிலேஜ் திட்டத்தினூடாக சலுகைகளையும் அனுபவிக்கலாம்.

அத்துடன், 500க்கும் அதிகமான விற்பனையகங்களிலிருந்து 0% தவணைக்கட்டணங்களையும் பெறலாம் அல்லது தமது கடன் அட்டை கணக்கின் மீது துரித கதியில் கடன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளலாம்.  

முதல் தடவையாக புதிய HSBC VISA Platinum Cashback அட்டையை பயன்படுத்துவோருக்கு, முதல் இரு மாதங்களில் 25000 ரூபாயை செலவிடும் போது மேலதிகமான 5000 ரூபாய் வரவேற்பு சலுகையாக வழங்கப்படும்.   

புதிய அட்டை அறிமுகம் தொடர்பில் HSBC ஸ்ரீ லங்காவின் சில்லறை வங்கியியல் மற்றும் சொத்துகள் முகாமைத்துவ செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி நதீஷ சேனாரத்ன கருத்துத்தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களை சிறப்பான முறையில் அறிந்து கொள்வதற்கு நாம் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறோம். இதன் பெறுபேறாக, அவர்களுக்கு பொருத்தமானதை நாம் உணர்ந்து கொள்கிறோம். அதன் காரணமாக இந்த பிரத்தியேகமான திட்டத்தை அறிமுகம் செய்ய நாம் தீர்மானித்தோம். HSBC Platinum Cashback அட்டையை பயன்படுத்தி நாம் தினசரி மேற்கொள்ளும் கொள்வனவுகள் வெகுமதிகளுடன் கூடிய அனுபவங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. நாம் ‘Bigdata’ வில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளதனூடாக எமது வாடிக்கையாளர்களின் தேவைகளையும், பாவனை முறைகளையும், அவர்களின் விருப்பங்களையும் கவனமாக ஆராய்ந்து புரிந்து கொள்கிறோம். தரவுகள் அடிப்படையிலான வெளிப்பாடாக இந்த புதிய திட்டம் அமைந்துள்ளதுடன், எமது வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நாம் இதனை அறிமுகம் செய்துள்ளோம்”. என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .