2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கோழிகளுக்கு ஆடைகள் தயாரித்த மூதாட்டி

Kogilavani   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


வயோதிப பெண்ணொருவர் கோழிகள் மீது கொண்ட அதீத பாசம் காரணமாக அவற்றுக்கு கம்பளி ஆடைகளை தயாரித்து அணிவித்த சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

இவரது இத்தகைய செயற்பாடானது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

முதியோர் இல்லமொன்றிற்கு கொண்டுவரப்பட்ட கோழிகளுக்கே  ஜோன் பெரட் என் வயோதிப பெண் ஆடைகளை தயாரித்து அணிவித்துள்ளார்.

கோழிகளுக்கு அணிவிக்கப்பட்ட ஆடைகள் மிகவும் வண்ணமயமானதாக காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

'இந்த கோழிகள் எமது இல்லத்தில்  இருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இவை எங்களுடன் எதையோ பேசுகின்றன. இதன்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்' என அப்பெண் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தினங்களில் கோழி இறைச்சி சமைப்பதற்றாக கோழிகள் இவ்வாறான முதியோர் இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதன்போது அக்கோழிகளை மேற்படி மூதாட்டி பாசத்துடன் அரவணைப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




You May Also Like

  Comments - 0

  • sumithy Thursday, 24 April 2014 09:01 AM

    I like uuuuuuuuuuuuu grandma…………..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .