2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

5,000 ஆண்களுடன் உறவுகொண்ட யுவதி

Super User   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

25 வயதான யுவதியொருவர், தான்  5,000 ஆண்களுடன் உடலுறவு கொண்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
 

பிரிட்டனைச் சேர்ந்த நிக்கி லீ எனும் இந்த யுவதி 16 வயதில் தனது கன்னித்தன்மையை இழந்தாராம். அதன்பின் இதுவரை 5000 ஆண்களுடன்  பகிர்ந்துக்கொண்டுள்ளார். இரவு விடுதிகள், சினிமா திரையரங்குள், பூங்காக்கள், நடன அரங்குகள், திறந்த வெளிகள் என பல்வேறு இடங்களிலும் அவர் பாலியல் உறவு கொண்டுள்ளாராம்.
 

விடுமுறைதளங்களில் கடற்கரைகள், பெல்கனிகள்  போன்ற இடங்களிலும் அவருக்கு இந்த அனுபவம் உள்ளதாம்.
 

தன்னுடன் படுக்கையறை பகிர்ந்துக்கொண்ட ஆண்கள் குறித்த விபரங்களை சிறிய சிவப்பு நிறத்திலான குறிப்புப் புத்தமொன்றில் தான் குறித்து வைப்பதகாவும் நி;க்கி தெவித்துள்ளார்.
 

இங்கிலாந்தின் எசெக்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த, அழகுக் கலைஞராக பணியாற்றும் இந்த யுவதி இது தொடர்பாக கூறுகையில் "எனது படுக்கையில் சிறப்பாக இருந்த வாலிபனுக்கு நான்  நட்சத்திர அடையாளமிட்டு வைப்பேன். எனது 18 ஆவது வயதில் நான்  வீட்டிலிருந்து வெளியேறி எனது நண்பர்களின் வீட்டில் தங்கினேன். அப்போது நான் உறவுகொண்ட ஆண்களின்  எண்ணிக்கை 800 ஐ தாண்டி இருந்ததை எனது குறிப்புப் புத்தகத்தினூடாக அறிந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
 

நிக்கியின் 21 ஆம் வயதில் அவரின் குறிப்புப் புத்தகத்தில் இடம்பெற்ற ஆண்களின் எண்ணிக்கை 2,289 ஆக உயர்ந்தது
 

தான் அரிதாகத்தான் இரண்டு தடவைகள் ஒரே நபருடன் உறவு கொண்டுள்ளதாகவும் தன்னை யாரும் டேட்டிங் செல்ல அழைத்தால் போலி தொலைபேசி இலக்கத்தை வழங்குவதகாவும்   நிக்கி கூறியுள்ளார்.
 

ஆனால் ஒரு நாள் இரவு நான்கு மனிதர்களுடன் தன்னுடைய படுக்கையை பகிர்ந்துக்கொண்டாராம்.
 

"ஆனாலும் என்னிடம் இரு இரு நிபந்தனைகள் உள்ளன. மற்றவர்களுக்குச் சொந்தமான ஆண்களுடன் நான் உறவுகொள்வதில்லை. அத்துடன் எப்போதும் பாதுகாப்பான செக்ஸ் மாத்திரம்தான் வைத்துக்கொள்வேன்" என "லவ் இட்" எனும் சஞ்சிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.
 

"நான் இப்போது 5,000 மனிதர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.  நான் செக்ஸ் அடிமை நிலைக்குள்ளாகியிருப்பதால் எனக்கு சிகிச்சைகள் தேவை என்னுடைய சில நண்பர்கள் கருதுகின்றனர். ஆனால் நான் பாலியல் அடிமையாக இருந்து அதில் நான் மகிழ்ச்சியடைந்தால், அதை நான் குணப்படுத்திக்கொள்ள நினைக்கவில்லை" என நிக்கி தெரிவித்துள்ளார்.
 

அதேவேளை, பாலியல் நடத்தை விவகார நிபுணரான டாக்டர் பாம் சுபுர் கருத்துத் தெரிவிக்கையில் நிக்கி  லீ இவ்வளவு அதிகமான ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்துக்கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
 

"அது உடல் ரீதியில்  சாத்தியமானது. ஆனால் உணர்வு ரீதியில் மிக ஆபத்தானது" என அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 13 August 2010 09:02 PM

    பெயர்:நிக்கி லீ.ஊர்:எசெக்ஸ். செய்தியும் படு செக்ஸ் ஆனால் நம்புகிறது போல் இல்லை.இதை ஊர்ஜிதப்படுத்துவது எப்படி? அதனால் மற்றவருக்கு என்ன நன்மை, ஒரு நாளைக்கு ஒருவர் என்று வைத்து பார்த்தால் கூட இது சாத்தியமா? இந்த நீல கலாசாரக்காலத்துக்கு ஏற்ற பெண்ணோ இவர்? இதற்காக ஊதியம் பெறவில்லை என்றால் சாதனை தான். ஆனால் நோய்களில் இருந்து எவ்வாறு தப்பினார் என்றும் தெரியவில்லை. இது சாத்தியம் என்று நம்ப முடியாது. கன்னித்தன்மையை விற்பது போன்ற செய்திகள் இந்த செய்திகளின் முக்கியத்துவத்தை குறைத்து விடும். விபசாரம் தோல்வி.

    Reply : 0       0

    Thilak Sunday, 15 August 2010 12:32 AM

    அவளுக்கு எத்தனை ஆயிரம் நோய்கள் என்று சொல்லவில்லையே.

    Reply : 0       0

    Lolo Monday, 16 August 2010 03:32 AM

    அவளுடைய NUMBER மட்டும் எடுத்து தாங்கோ...Please.....

    Reply : 0       0

    gg Tuesday, 17 August 2010 06:35 AM

    ஐ ஒ ஐ ஒ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .