2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆள்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின்   புதுக்குடியிருப்பு பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட  9 ஆம் வட்டாராம், மல்லிகைத்தீவு   கிராமத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஆழ்துளை கிணறுகள் 3 அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்ட பின்னர்  தமது வீடுகளிலுள்ள கிணறுகள் வற்றிப்போயுள்ளதாகப்   பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.அத்தோடு, இது குறித்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு கொண்டுசென்றும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.  

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின்  புதுக்குடியிருப்பு பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட  9 ஆம் வட்டாராம், மல்லிகைத்தீவு  கிராமத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஆழ்துளை கிணறுகள் மூன்றை அமைக்கும் பணிகள் கடந்த மாதம் இடம்பெற்றன.

அந்த ஆழ்துளை கிணறுகள் ஒவ்வொன்றும் 250 அடி ஆழம்வரை அமைக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் 9 ஆம் வட்டாராம் பிரதேசத்தில்   அமைக்கப்படுகின்ற சாதாரண கிணறுகள் 40 தொடக்கம் 80 அடி ஆழம் அமைக்கும் போதே நீரை பெற்றுக்கொள்ள முடிகிறது .

அவ்வாறு அமைக்கும் போதே  கிணறுகளில் போதிய அளவு  நீர் கிடைப்பதாகவும் அதன்மூலம் குடிநீர், தோட்டங்கள்,  விவசாயம் போன்றவற்றிற்கும் பயன்படுத்துவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையிலே,  தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முல்லைத்தீவு அலுவலகத்தினால்   அப்பகுதியிலுள்ள மூன்று ஏக்கருக்கும் அதிகமாக காணிகள் அழிக்கப்பட்டு, 3 ஆழ்துளை  கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எமது கிணறுகளில் நீர்வற்றி நீரின்றி தவிப்பதாகவும் இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் கோருகின்றனர்

இந்த விடஜம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் - சிவலிங்கம் சுரேஸ்   ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு தற்போது தடை உள்ளதாகவும் இவ்வாறு பெரிய ஆழ்துளை கிணறுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை நிறுத்தவேண்டும் எனவும் இந்த கிணறுகளை அமைக்க சிறிய பகுதி போதியதாக காணப்படும்  நிலையில், கிணறு அமைப்பதை காரணம் காட்டி பெரிய நிலப்பரப்பு துப்பரவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவும்   அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு திட்டத்தை நிறுத்துமாறு  புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாராம் கமக்கார அமைப்பினால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் ஏற்கனவே கடிதம் ஒன்று  கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம்   தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும்  புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாராம் கமக்கார அமைப்பு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .