2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’பொறுப்பற்ற தன்மையே மேலதிக விதைப்புக்குக் காரணம்’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 மே 31 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் கீழ், இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையின் மேலதிக விதைப்புக்களுக்கு, அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

“இரணைமடுக் குளத்தின் கீழ் உள்ள சிறுபோக நெற்செய்கையில் தீர்மானிக்கப்பட்ட அளவை விட 270 ஏக்கர் அதிகமாக, மேலதிக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மேலதிகப் பயிர்ச்செய்கைகளை அழிப்பதாக, அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவானது, இப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. ஏற்கனவே நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல சேவைநிலையத் திணைக்களம் என்பன, பயிர்ச்செய்கை நிலங்களை அளவீடு செய்யாது, பொறுப்பற்ற விதத்தில் விவசாயிகளுக்கு வழங்கியதன் காரணமாகவே, இவ்வாறான மேலதிக விதைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்றும், விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

“இக்காலப்பகுதியில், குளத்தின் நீரின் அளவைக்கொண்டு தீர்மானிக்கப்பட்ட 850 ஏக்கர் நிலப்பரப்பை விட மேலதிகமான பயிர்ச்செய்கைக்கான நிலத்தைப் பொறுப்பற்ற விதத்தில் வழங்கியது, அது சார்ந்த அதிகாரிகளின் குறைபாடே ஆகும். எனவே, மேலதிக பயிர்ச்செய்கை தொடர்பிலான அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை, விவசாயிகளை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது” என, விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .