2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

George   / 2016 மே 19 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'வெள்ளத்தால் பாதிக்கப்;பட்ட வட மாகாண மக்களுக்கான சகல உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என வட மாகாண ஆளுநர் றெஜினேல்ட் குரே தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை பார்வையிடுவதற்று சென்ற ஆளுநர், பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களுடன் புதன்கிழமை கலந்துரையாடினார்.

அதனையடுத்து, உதவி பொருட்களை வழங்கிவைத்த ஆளுநர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'இயற்கை அனர்த்தத்தால் முழு இலங்கையையும் பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் உதவிகளை தங்;கு தடையின்றி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான சகல உதவிகளையும் வழங்க மாவட்டச் செயலாளர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார் ஆகியோரை முன்னிலைப்படுத்தி, அனைவருக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும். அத்துடன், வீடுகளை இழந்தவர்களுக்கான உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .