2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதித்தார் கோட்டா’

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

நாட்டின் பாதுகாப்புக்குக் களங்கம் விளைவிக்காத வகையில், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கலாமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் நா.அன்புராஜ் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு - வேணாவில் பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை பணிமனையில், நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தங்கள் கட்சி சிறிய கட்சியாக இருந்தாலும், மஹிந்த ராஜபக்‌ஷ தமக்கு நேரடியாக அழைப்பு விடுத்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க தங்களை அழைப்பதற்கு ஏற்பாடுகள் இருந்தும், இறுதியில் அழைக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

ரணியின் இச்செயற்பாட்டுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளார்ந்த கருத்துகளே காரணமெனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

புதிய அரசாங்கத்துடன் தங்கள் கட்சி பேசியளவில், முன்னாள் போராளிகளுக்கான வேலைவாய்ப்பு பண்ணைத்திட்டங்களை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்களெனத் தெரிவித்த அவர், அந்த வகையில் முன்னால் போராளிகள், தமது கட்சி தலைமையகத்துக்கு வந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், நாட்டின் பாதுகாப்புக்குக் களங்கம் விளைவிக்காத வகையில், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கலாமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளதாகவும், அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .