2024 மே 08, புதன்கிழமை

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்றிட்டம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட மாகாணத்தில் போரின்போது காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டமொன்றை வட மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது என வடக்கு மாகாண சுகாதார, புனர்வாழ்வு அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இறுதி யுத்தத்தின்போது காயமடைந்து பலர் சுயமாக இயங்க முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் பலர் முள்ளந்தண்டுவடம் பாதிப்படைந்து படுக்கையில் உள்ளனர். மீள்குடியேறிய பிரதேசங்களில் வாழும் பெரும்பாலானவர்களை வீடுகளில் வைத்து பராமரிப்பதில் பிரச்சினைகள் உள்ளன. இதன் ஒரு கட்டமாக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சுயமாக இயங்க முடியாத மற்றும் வீடுகளில் வைத்து பராமரிக்க முடியாதவர்களை பராமரித்து மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நிலையமொன்று கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வவுனியாவில் 'வைகறை' எனும் பெயரில் இயங்கிவருகின்றது. 

வடக்கு மாகாண சகாதார அமைச்சின்கீழ் இயங்கிவரும் இந்த விசேட பிரிவு, வவுனியா பொது வைத்தியசாலையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இந்நிலையத்தில் ஒரேதடவையில் 20 முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகள் உள்ளன.

இவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் இவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள், உளவளத்துறை ஆலோசனைகள் மற்றும் சக்கரக்கதிரைகள் பயன்படுத்துதல், திருத்தம், சலப்பை முகாமைத்துவம் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு தமது தேவைகளை தாமாகவே செய்யக்கூடியவகையில் புனர்வாழ்வழிக்கப்பட்டு கட்டம் கட்டமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றார்கள். 

இதற்கு மேலதிகமாக இவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிய பின்னர்; இவர்களுக்கான விசேட மலசலகூடம் அமைப்பதற்கான மானிய உதவியும் வழங்கப்படுவதுடன் சுயதொழில் முயற்சிக்கான உதவிகளும் வழங்க மாகாண புனர்வாழ்வு திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்தவருவதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X