2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சட்டவிரோத கசிப்பு வைத்திருந்த நபர்களுக்கு அபராதம் விதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 18 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

விசுவமடு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பை  வைத்திருந்த மூன்று பேருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பி.சிவகுமார் அபராதத்தொகை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

விசுவமடு நகருக்கு அண்மையான பகுதியில் சட்டவிரோதமாக ஒரு இலட்சத்து 62 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பை  பரலில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில்  நபரொருவருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பி.சிவகுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை, 41 போத்தல்கள்; கசிப்பு வைத்திருந்ததான குற்றச்சாட்டில்  மற்றுமொரு நபருக்கு  ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிவான் தீர்ப்பளித்துள்ளார்.

15 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்ததான குற்றச்சாட்டில் இன்னுமொரு நபருக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிவான் தீர்;ப்பளித்துள்ளார்.

மேற்படி நபர்கள் தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி நேரிடுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பொலிஸாரும் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .