2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரச அதிபர் உத்தரவாதமளித்தால் மீண்டும் சொந்தகிராமம் செல்ல தயார்: கந்தசாமிநகர் மக்கள்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள கந்தசாமிநகர் மக்கள், அரசாங்க அதிபர் உயிருக்கு உத்தரவாதமளித்தால் மீண்டும் தமது கிராமங்களுக்கு செல்லத் தயார் என பிரதேச செயலாளாரிடம் இன்று தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவித்ததாவது,

எமது கிராமத்தில் தொடர்ச்சியாக இடப்பெயர்வுகள் இடம்பெறுகின்றது. யானைகளின் அட்டகாசம் மற்றும் மழை வெள்ளம் என நாம் தொடர்ந்தும் இடம்பெயருகின்றோம். 45 குடும்பங்களுக்கு அங்கு வீட்டுத்திட்டம் தரப்பட்டிருந்தது. எனினும் தற்போது 42 குடும்பங்களெ இங்கு தங்கியுள்ளனர். அவர்கள் அனைவருமே இடம்பெயர்ந்து தற்போது இப் பாடசாலையில் 165 பேர் தங்கியுள்ளோம்.

எமது கிராமத்திற்கு பாவற்குளம் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் பின்னர் கடும் வெள்ளம் திடீரென் உட்புகுந்தது. இதன் காரணமாக நாம் எமது சில பொருட்களை எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்தோம். அப்போது பிரதேசசபை உறுப்பினர் சிவநேசனே எம்மை காப்பாற்றியிருந்தார். எமது கால்நடைகள், பாத்திரங்கள், வீட்டுச்சாமான்கள் என பலவும் வெள்ளத்தில் அள்ளிச்செல்லப்பட்டு விட்டது.

இந்நிலையில் அரசாங்க அதிபர் உத்திரவாதமளித்தால் நாம் எமது கிராமத்திற்கு மீண்டும் செல்ல தயார் செட்டிகுளத்திற்கு இடம்பெயர்ந்தவர்களை பார்வையிட சென்ற வவுனியா அரசாங்கஅதிபரிடம் தெரிவிக்குமாறு பிரதேச செயலாளர் கே.கமலதாசிடம் அக்கிராம மக்கள் சார்பில் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .