2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'யுத்தகாலத்தில் பல நிறைவான பணிகளை கூட்டுறவுத்துறையினர் மேற்கொண்டனர்'

Kogilavani   / 2013 ஜனவரி 04 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
'யுத்தகாலத்தில் பல நிறைவான பணிகளை கூட்டுறவுத்துறையினர் மேற்கொண்டனர். அதேபோல் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவது முதல் உலருணவுகள் வழங்குதல் வரை தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்திருந்தனர். எனவே தங்களின் பிரதேசங்களிலுள்ள கூட்டுறவுத்துறையினை பலப்படுத்தி வளர்ப்பதன் மூலம் மக்கள் தங்களை பலப்படுத்திக்கொள்ளமுடியும்' என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சின்னத்தாளையடி மற்றும் வண்ணாங்கேணி பிரதேசங்களில் அமைக்கப்பட்ட இரு கூட்டுறவு விற்பனை நிலையங்களை திறந்து வைத்து உரையாற்றும் போதே நாடாளுமன்ற முருகேசு சந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 43 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'பளை பிரதேசத்தில் கூட்டுறவுத்துறைக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. நவீன முறையில் பல விற்பனை நிலையங்கள் அமைத்துகொடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு பச்சிலைப்பள்ளி  பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கான எரிபொருள் நிலையத்தினை அமைத்துகொடுக்கும் முயற்சிகள் வெற்றிபெரும் நிலையில் உள்ளது. கூட்டுறவுத்துறையை பொறுத்தவரை எரிபொருள் விற்பனை பிரதான வருமானம் ஈட்டும் துறையாகும்.

'யுத்தகாலத்தில் பல நிறைவான பணிகளை கூட்டுறவுத்துறையினர் மேற்கொண்டனர். அதேபோல் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவது முதல் உலருணவுகள் வழங்குதல் வரை தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்திருந்தனர். எனவே தங்களின் பிரதேசங்களிலுள்ள கூட்டுறவுத்துறையினை பலப்படுத்தி வளர்ப்பதன் மூலம் மக்கள் தங்களை பலப்படுத்திக்கொள்ளமுடியும்.

போட்டிபாட்டிச் சந்தையில் தனியார் துறையினருடன் போட்டி இருப்பதால் கூட்டுறவுத்துறை அதற்கேற்றமுறையில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட இயக்குநர் சபை அந்த மக்களின் விருப்புகளுக்கு ஏற்ற வகையில் செயற்படவேண்டும்.

பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தலைவர் தியாகராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்களான அன்ரன் அன்பழகன், தியாகராசா, பிரதேச செயலர் சத்தியசீலன், மீள் எழுச்சித்திட்டம், வடக்கின் துரித மீட்சி திட்டத்தின் மேலதிக பணிப்பாளர் றொபேட் பீரிஸ், த்அதன் கிளிநொச்சி மாவட்ட பிரதிதிட்டப் பணிப்பாளர் விஜயகிருஸ்னண், வவுனிய பிரதிதிட்டப் பணிப்பாளர் றஞ்சித், பச்சிலைப்பள்p பல நோக்கு கூட்டுறவுச்சங்க பொது முகைமையாளர் சத்திலீலா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிராம அலுவலர் சுதர்சினி, பளை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத் தலைவர் இராசதுரை, பளை வர்த்தக சங்கத் தலைவர் குலேந்திரராசா, சமூக சேவையாளர் தர்மலிங்கம், சங்கத்தின் பணியாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .