2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சக விடயங்களிலுமே இராணுவம் தலையிகின்றது: அனுரகுமார

Kanagaraj   / 2013 ஜூலை 31 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடக்கில் தேர்தலில் மட்டுமல்லாமல், எல்லா விடயங்களிலுமே இராணுவம் தலையிடுகின்றது என ஜே. வி. பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்திற்குரிய வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிந்து நான்கு வருடங்களாகின்றன. எனவே, சிவில் நிர்வாக நடவடிக்கைகள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவது, பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கையில் தலையிடுவது போன்ற செயற்பாடுகளை இராணுவம் நிறுத்த வேண்டும்.

வடக்கில் இராணுவம் தனக்குரிய பணிகளை மட்டுமே செய்ய வேண்டும். பொலிஸார் தமக்குரிய சிவில் நிர்வாகக் கடமைகளைச் செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் தமது வேலைகளைத் தாங்கள் செய்ய வேண்டும். இதுவே ஜே.வி.பி.யின் நிலைப்பாடு.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து வடபகுதி மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலை இன்னும் தோன்றவில்லை. இராணுவம் ஆக்கிரமிப்பு வடக்கில் நிலை கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுவே எமது நோக்கம் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .