2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் இலவச மருத்துவ முகாமும் முதலுதவிப் பயிற்சியும்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாமும் முதலுதவிப் பயிற்சியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டில் நேற்று  புதன்கிழமை (16) நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாமில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதுடன்,  சுகாதார விழிவுப்புணர்வு பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தங்களின்போது மேற்கொள்ளப்படவேண்டிய முதலுதவிகள் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவ முகாமில் 100 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.

இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினார் இ.ரவிகரன்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உளரீதியாக பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளார். இந்த மக்களிற்கு இவ்வாறான மருத்துவ சேவைகள் ஒரு ஆறுதலை அளிக்கக் கூடியதாக அமையும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளவர்கள்; யுத்தத்தால் பொருளாதார ரீதியிலும் உடல் உள ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலைமைகளிலிருந்து  மக்களை மீள்ளெழுச்சி பெறுவதற்கு இவ்வாறான சேவைகள் பெரிதும் பங்காற்றுகின்றன எனக் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .