2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னாரில் காணாமல் போனோரின் விபரங்கள் ஞாயிறு வரை திரட்டப்படும்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


காணாமல் போனோரின் விபரங்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கும் முகமாக மன்னார் பிஜைகள் குழு வட மாகாண முழுவதிலும் விபரங்களை சேகரித்து வருகிறது.

இம்மாதம் 14 ஆம் திகதி அரம்பிக்கப்பட்ட இவ் வேலைத்திட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன் படி கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 15 ஆம் திகதி கிளிநோச்சியிலும்,16 ஆம் திகதி முல்லைத்தீவிலும்,17 ஆம் திகதி வவுனியாவிலும் குறித்த காணாமல் போணவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே வேளை நேற்று  வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதி  காலை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் குறித்த காணாமல் போனோரின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.

மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோனி சகாயம் தலைமையில் நடைபெற்ற குறித்த காணாமல் போனோரின் விபரங்களை பதிவு செய்யும் நிகழ்வில் மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.சுனோஸ் சோசை கலந்து கொண்டு விபரங்களை பதிவு செய்தார்.

பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பதிவுகளை நேற்று பதிவு செய்தனர்.

இது வரையில் மன்னார் மாவட்டத்தில் 240 பதிவுகள் பதிவு செய்யப்பட்டள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி இது வரை காணாமல் போனவர்கள் தொடர்பாக 2600 பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்ன்hர் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோனி சகாயம் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .