2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நானாட்டான் பொன்தீவுகண்டலில் பதற்றம்; பொலிஸார் குவிப்பு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்
 
மன்னார், நானாட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள பொன்தீவுகண்டல் கிராம அலுவலர் பிரிவில் மீள் குடியேற்றத்திற்கான காணி பகிர்ந்தளித்தலில் ஏற்பட்ட பிணக்குகளைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை குறித்த காணியில், இடம் பெயர்ந்த முஸ்ஸிம் மக்கள் அக்காணிகளில் வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டமையினால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
 
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
 
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவுகண்டல் கிராமத்தில் காணி பகிர்ந்தளிப்பு தொடர்பாக நீண்ட நாள் இரு சமூகத்தினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு வந்தது.
 
இந்த நிலையில் நானாட்டான் பிரதேசச் செயலாளர், குறித்த காணியினை இரண்டாக பிரித்து இடம்பெயர்ந்த முஸ்ஸிம் மக்களுக்கும், ஏனைய காணியினை பொன்தீவுகிராம மக்களுக்கும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் முஸ்ஸிம் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட காணியில் இன்று சனிக்கிழமை காலை முதல் அந்த காணியின் உரிமையாளர்கள் வீட்டு திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பொன்தீவுகண்டல் கிராம மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
 
வீட்டு வேளைத்திட்டம் இடம்பெறும் பகுதியில் ஒன்று திரண்ட மக்கள், எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
 
இந்த நிலையில் நூற்றுக்கணக்கான பொலிஸாரும், கலகம் அடக்கும் பொலிஸாரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
பின்னர், பொலிஸார் -பொன்தீவுகண்டல் கிராம மக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்களை மேற்கொள்ள எத்தனித்தனர். இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்டனி விக்டர் சோசை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், அளவக்கை பங்குத்தந்தை சுரேஸ் றெவல், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொன்தீவுகண்டல் கிராம மக்களுடன் கலந்துரையாடினர்.
 
இந்த நிலையில் தற்போது முஸ்ஸிம் மக்களுக்கு நானாட்டான் பிரதேச செயலகத்தினால் ஒதுக்கப்பட்ட பொன்தீவுகண்டல் பகுதியில் உள்ள காணியில் முஸ்ஸிம் மக்கள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத வகையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0

  • Jaffral Saturday, 07 December 2013 11:35 AM

    நாம் அனைவரும் ஒரே மக்கள் ஏன் இந்த வேறுபாடு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .