2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நகரசபை ஊழியர்களை முன்னாள் போராளிகளாக சித்தரிக்க முயற்சி: சங்கம் குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 31 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

நகரசபை ஊழியர்களை முன்னாள் போராளிகளாக வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் சித்தரித்துள்ளமையை தாம் கண்டிப்பதாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா கிளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வவுனியா கிளை நிர்வாகத் தலைவர் இ.சித்திரன்; கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு ந்திவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சில நாட்களாக வடக்கின் பல பகுதிகளில் சுற்றிவளைப்பு தேடுதல்  என பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை அறிந்து மக்கள் அச்ச உணர்வில் வாழ்ந்து வரும்   நிலையில் வவுனியா நகரசபை தொழிலாளர்களுக்கு 'வெந்த புண்ணில் வேலை  பாய்ச்சுவது' போன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் சில ஊடகங்களில் மீண்டும் அரசபடைகள் முன்னாள் போராளிகளை துன்பப்படுத்துகின்றனர் என்னும் கருத்துப்பட வெளியிடப்பட்ட  செய்தி ஒன்றில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன்; முன்னாள் போராளிகளை சந்தித்ததாகவும் அவர்கள் தொடர்பான பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதாகவும் கூறி செய்தி ஒன்றினை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார். 

அதில் முன்னாள் போராளிகள் என எமது போராட்டத்தின்போது அவரால் எடுக்கப்பட்ட நான்கு புகைப்படங்களை முன்னாள் போராளிகளின் புகைப்படமாக காட்டியுள்ளார். கடந்த 09ஃ01ஃ2014 அன்று நிரந்தர நியமனத்திற்காக போராடிய வவுனியா  நகர சபையின் ஊழியர்கள் அடங்கிய படத்தினை இவர் வழங்கி அதனை சில ஊடகங்கள் பிரசுரித்துள்ளன.

இதன் மூலமாக தங்களது முகங்கள் முன்னாள் போராளிகள் போன்று  வெளியிடப்பட்டதனை அறிந்த ஊழியர்கள் கடும் விசனம் அடைந்த நிலையில் நிர்வாகத்தினராகிய நம்மிடம் முறையிட்டு தங்களுக்கு ஏற்படபோகும்  துன்பங்களுக்கு யார் பொறுப்பு? என வினாவுகின்றனர்.

இந் நிலையில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் முற்றிலும் பொய்யானவை என நிராகரிப்பதுடன்  சில அரசியல்வாதிகளும் ஊடக முகவர்களும் உங்களது விளம்பரங்களுக்காக அப்பாவிகளை பயன் படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்  கொள்வதுடன்,  இவ்வாறான சம்பவங்களை வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன்  இனி  வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் ஏற்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடவேண்டி வரும் எனவும் அவ்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .