2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விதை நிலக்கடலைகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 1,230 நிலக்கடலைச் செய்கையாளர்களுக்கு விதை நிலக்கடலைகள்  செவ்வாய்க்கிழமை (08) வழங்கப்பட்டன.

400 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலைச் செய்கை மேற்கொள்வதற்காக 16,000 கிலோகிராம் நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டன.
இதற்கான நிதியுதவியை உலக உணவு ஸ்தாபனம் வழங்கியது.

கிளிநொச்சி மாவட்ட விவசாய விரிவாக்கல் பணிமனையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாயவன் கிராமத்தில் வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் பயிர்ச் சிகிச்சை முகாமும் செவ்வாய்க்கிழமை (08) காலை நடைபெற்றது.

இதில் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களும் அந்நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பில் விவசாய போதனாசிரியர்கள் விளக்கமளித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .