2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'முல்லைத்தீவு மக்களின் மீள்குடியேற்றம் புதிய அரசாங்கத்தின் கையில்'

Gavitha   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மக்களின் மீள்குடியேற்றத்தை முழுமையாக கையாளுகின்ற அதிகாரம்,  புதிய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் என்று நம்புவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முல்லைத்தீவு, நீராவிப்பட்டியில் நேற்று புதன்கிழமை (05) நண்பகல் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் இறுதிக்கட்ட யுத்தம் நடந்த முடிந்த இடமாக முல்லைத்தீவு மாவட்டம் கருதப்படுகின்றது. இங்கு மீPள்குடியேற்றம் என்பது, அறைகுறையாக இருக்கிறது. எனவே, இங்கு வாழும் மக்களின் மீள்குடியேற்றத்தை முழுமையாக கையாளுகின்ற அதிகாரம் புதிய அரசாங்கத்தில் கிடைக்கும் என நம்புகிறோம்.

அத்துடன், குழாய் மூலம் குடிநீர்த்திட்டங்களை வழங்குவதற்கும் நாம் திட்டமிடல்களை மேற்கொண்டு வருகிறோம். மட்டுமன்றி, வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் எமது கட்சி முழு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்திய வீட்டுத்திட்டம், மானிய அடிப்படையில் வீடுகளை வழங்குவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

வன்னி மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெறமுடியுமா என்று நாம் அன்று சிந்தித்தோம். ஆனால் வன்னி மாவட்டம் உட்பட நாடுபூராகம் பத்து ஆசனங்களை  மு.கா பெற்றுக்கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அத்துடன், வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வேட்பாளர்களாக கமிறங்கியவர்கள்,  அதில் இருந்துகொண்டு பிரயோசனமில்லை என்றும் வேறு எந்தக்கட்சியோடு இணைந்துகொள்வது என சிந்தித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

அவ்வாறானவர்களை மிகவும் கௌரவமாக ஏற்றுக் கொள்வதற்கு எமது கட்சி எப்போதும் தயாராகவே இருக்கிறது. அத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதி மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டமொன்று நடைபெறவுள்ளது. அதில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும். அங்கு வன்னி அரசியல் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட முக்கிய பிரகடனங்கள் செய்யப்படவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .