2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மாவட்டத்தின் தேவையை நிறைவாக்க வேண்டும்’

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கடலில் பிடிக்கப்படும் மீன்கள், முதலில் மாவட்ட மக்களின் தேவைகள் நிறைவு செய்ய வேண்டும் என மாவட்ட பொது அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. 2009ஆம் ஆண்டின் பின்னர் முல்லைத்தீவில் பிடிக்கப்படும் மீன்கள், கூடுதலாக கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் முல்லைத்தீவு சந்தையில் மீன்களைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்களுக்கு நெருக்கடி உள்ளதாகவும் கூடுதலான விலையில் மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடமும் மக்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவுக் கடலில் பிடிக்கப்படும் மீன்கள், கூடுதல் விலையைக் கருத்திற்கொண்டு, கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இதன்காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் பிடிக்கப்படும் மீன்கள் கூடுதலாக சந்தைக்குக் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சமாசம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கையை மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம் மேற்கொள்ள வேண்டும் என்பது பொது அமைப்புகளின் வேண்டுகையாகும்.

முல்லைத்தீவு கடற்கரையிலேயே ஏற்றுமதி அதிகரித்திருப்பதன் காரணமாக உள்ளூர் மக்கள் கூடுதல் விலையில் மீன்களை பெறவேண்டி உள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .