2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யானைகளால் நெற்பயிர்கள் அழிவு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் தொடரும் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் பயிர்ச்செய்கைகள் அழிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி வன்னேரிக்குளத்தின் கீழான காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அறுவடைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதுடன், அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ள வயல்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள், இரவு வேளைகளில் வயல்களைக் காவல் காக்கின்றபோதும், யானைகள் அவர்களைப் பொருட்படுத்தாது, வயல் வெளிகளுக்குள் புகுந்து பயிர்ச்செய்கைகளை அழிக்கின்றன என தெரிவித்த விவசாயிகள், யானைகளால் தாம் உயிர் ஆபத்துக்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது அறுவடை நெருங்கியுள்ள போதும் 35 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்ச்செய்கைகள் காட்டுயானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .