2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கண்டாவளையில் ஒருங்கிணைப்புக் கூட்டம்

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

கண்டாவளைப் பிரதேச ஒருங்கிணைப்புக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் தருமபுரம் நெசவு நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபாவதி கேதீஸ்வரன், கண்டாவளைப் பிரதேச செயலர் சி.சத்தியசீலன், திணைக்களத் தலைவர்கள், தொண்டு நிறுவனப்பிரதிநிதிகள், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் , பொலிஸ், இராணுவ அதிகாரிகள் ,கரைச்சி வடக்கு ப.நோ.கூ சங்கத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீள்குடியேற்றத்தின் போது வாழ்வாதரம் மற்றும் தொழில் முயற்சிகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.

கண்டாவளைக்கெனத் தனியான பிரதேசபை ஒன்றினை உருவாக்குதல், கண்டாவளைப் பிரதேச செயலகத்துக்கு புதிய இடத்தில் நிரந்தரக் கட்டடம் ஒன்றினை அமைத்தல் என்பன பற்றியும் இதன் போது ஆராயப்பட்டது.

அத்துடன் தருமபுரம் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்களை அடுத்து அங்கு பொலிஸ்நிலையம் ஒன்றை அமைக்கவேண்டும் எனப் பொதுமக்கள் பிரதிநிதிகளால் கோரிக்கை விடப்பட்டது.

பொலிஸ் நிலையத்தை அமைக்கப் பொருத்தமான இடத்தை தெரிவு செய்தால் உடனடியாகப் பொலிஸ் நிலையத்தை அமைக்கலாம் எனப் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை விரைவில் பெற்றுத்தருவதாக கண்டாவளை பிரதேச செயலர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .