2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

315 கிலோமீற்றர் வரையான வீதிகள் புனரமைக்க வேண்டியுள்ளது

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 315 கிலோமீற்றர் வரையான வீதிகள் புனரமைக்க வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் உள்ள சிறிய மற்றும் பிரதான வீதிகள் பல இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்கள் தமது போக்;குவரத்துக்களிலும் அன்றாடத்தேவைகளை நிறைவு செய்வதிலும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நீர்ப்பாசனத்திணைக்களத்துக்குச் சொந்தமான சுமார் 120 கிலோமீற்றர் வீதியும் பிரதேச சபைக்குச்சொந்தமான     110 கிலோமீற்றர் நீளமான வீதியும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான 85 கிலோமீற்றர் நீளமான வீதியும் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறு வீதிகள் புனரமைப்பு செய்யப்படாமையினை காரணமாகக்காட்டி பின்தங்கிய பகுதிகளுக்கான போக்குவரத்;து வசதிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

ஓவ்வொரு வருடமும் குறித்த வீதிகள் புனரமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்ற போதும், புனரமைக்கப்படுவதில்லை என தெரிவித்துள்ள கிராம அமைப்புக்களும் பொதுமக்களும், பின்தங்கிய தமது பகுதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதிலும் போக்குவரத்துக்களிலும் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .