2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 31

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1876: இந்தியாவில் வீசிய கடும் சூறாவளியினால் 2 இலட்சம் பேர் பலியாகினர்.

1941: அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ரெயூபன் ஜேம்ஸ் எனும் கப்பல் ஜேர்மன் படையினரால் மூழ்கடிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியினால் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது அமெரிக்க கடற்படைக் கப்பல் இதுவாகும்.

1956: சுயஸ் கால்வாயை திறக்க நிர்ப்பந்திப்பதற்காக, எகிப்தின் மீது பிரித்தானிய பிரெஞ்சு படைகள் குண்டுத்தாக்குதல் நடத்தின.

1984: இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் 1000 இற்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

2000: சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானமொன்று நிர்மாணக் கருவியொன்றுடன் மோதியதால் பயணிகள் சிப்பந்திகள் உட்பட 79 பேர் பலி.    

2000: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் தடவையாக மனிதர்கள் தங்குவதற்கு அனுப்பப்பட்டனர்.   

2003: மலேஷியாவில் 22 வருடங்கள் பிரதமராக பதவி வகித்த மஹதிர்   மொஹமட் இராஜினாமாச் செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .