2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உங்கள் அபிமான ஹோட்டல் உணவுகள் தூய்மையானவையா?

Super User   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில தினங்களுக்கு முன்னர்  கொழும்பு கோட்டை, புறக்கோட்டை பகுதிகளிலுள்ள ஹோட்டல்களை (உணவகங்களை ) சுகாதார அதிகாரிகள் சோதனையிட்டபோது, 64 ஹோட்டல்கள்  உணவு சமைப்பதற்கு பொருத்தமற்ற நிலையில் மிக மோசமான நிலையிலும் உண்பதற்குப் பொருத்தமில்லாத உணவுகளை தயாரிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறான சம்பவங்கள் புதிதாக இப்போது மட்டும் நடக்கவில்லை. காலங்காலமாக பல இடங்களிலும் எமக்குத் தெரியாமல் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

விற்பனையை மட்டும் நோக்கமாகக் கொண்ட சில ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மனிதர்கள் என்பதையே மறந்துவிடுகின்றார்கள். விலங்குகள்கூட உண்ணமுடியாத உணவுகளை பசியில் வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றார்கள்.

பொதுவாக, அதிகமாக ஆண்களே ஹோட்டல் உணவுகளை நம்பி வாழ்கின்றார்கள். வேலைப்பளு மிகுந்த காரணத்தால் சமைத்து உண்பதை பெரிய விடயமாக கருதும் ஆண்களை நம்பியே இந்த ஹோட்டல் உரிமையாளர்கள் ஆங்காங்கே கடைகளை திறந்து வைத்துவிடுகின்றனர்.

சில  ஆண்களிடம் ஒரு பழக்கம் உண்டு. என்னதான் அருவருக்கத் தக்கதாக இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல், அதை மறந்துவிட்டு இவ்வாறான உணவுகளை கடைப்பிடிப்பதுதான். உண்பதுதான் அது. இவ்வாறானவர்கள் இருக்கும் வரை இந்த ஹோட்டல் உரிமையாளர்களுக்கு இலாபம்தான்.

சில ஹோட்டல்களில் சமைப்பதற்காக வாங்கும் பொருட்;கள் பழுதடைந்தாலும் அந்த பொருட்களை குப்பையில் எறிந்துவிடாமல் அதையும் உணவுபொருட்களுடன் கலந்து உணவுப் பொருட்களை தயார் செய்துவிடுவார்கள். 

இதைவிட, ஹோட்டல்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தங்களது வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர்களின் நலனை புறக்கணித்துவிடுவதுண்டு.

ஒரு உணவுப்பண்டம் தயாரித்த பாத்திரத்தை முறையாகக் கழுவாமலே அடுத்த உணவுப்பண்டத்தை தயார்செய்ய ஆரம்பிப்பதும் உண்டு. இதைவிட இனிப்புப் பண்டங்களை செய்து அதை பொலித்தீன் பைகளில் அடைத்து வைத்துவிட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு காலம் சென்றாலும் அதை விற்றுவிடுவதும் நடக்கிறது.

இவ்வாறான சம்பவங்கள் சில உணவகங்களில் நடக்கின்றது என்பதை அறிந்தும் கூட அந்த உணவுகளின் வாடிக்கையாளர்களாகி விடுபவர்கள் பலர்.

இவர்களிடம் வினவினால் 'நாங்கள் இந்த சிறு விடயங்களையெல்லாம் மனதில் போட்டு அலட்டிக்கொள்வதில்லை. உணவில் அப்படியே எதுவும் கிடந்தால் தூக்கியெறிந்துவிட்டு உண்ணவேண்டியதுதானே? இதெல்லாம் என்ன பெரிய விடயமா?' என்று கூறிவிட்டு நகர்ந்துகொண்டு இருப்பார்கள்.

இவர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் பெரிய விடயமாக இருக்காது. ஆனாலும், ஒரு விடயத்தை மறக்கின்றார்கள். சுத்தமான உணவுப் பழக்கவழக்கம் இல்லாமல் இருந்தால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டியேற்படும் என்பதுதான் அது.

ஆண்களே, நாவுக்குச் சுவையான உணவுகள்; கிடைக்கின்றது என்பதற்காக சுகாதாரமற்ற உணவகங்களில் எந்த உணவையும் வாங்கி உண்ணும் பழக்கத்தை கைவிட்டு வீட்டில் தயாரிக்கப்படும் உணவை உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 20 August 2010 09:24 PM

    உணவின் விலை அதிகம். அதற்கு பல காரணங்களும் கூறப்படுகின்றன. அதிகமான இட வாடகை. சில இடங்கள் இலட்சக்கணக்கில் மாதவாடகை! தொழிலாளர் ஒத்துழைப்பின்மை அடுத்தகாரணம், ஆணும் பெண்ணும் வேலைக்குபோவதால் கடைகளில் வியாபாரத்துக்கு பஞ்சம் இல்லை. விடுமுறை நாட்களில் கூட யாரும் வீட்டில் சமைக்கின்றார்களா என்று தெரியவில்லை, வீட்டு வேலைக்கு ஆட்களை வைத்துக்கொள்வது அபாயமாகி விட்டதால் என்ன சட்டம் போட்டாலும் ஒருகுறுகிய நேரத்தில் உணவை ஆக்கி படைப்பது சவாலாகவே இருக்கும் விலைக்கட்டுப்பாடும் இல்லை. சைவ உணவு விலையை பாருங்களேன், சுட சுட வடை விற்கும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .